LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவில் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் மேல்முறையீடு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான வக்கீல் நியோமி ராவை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்காவில் கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரட் கவனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக, கொலம்பியா சர்க்கியூட் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். 

அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் படைத்த மேல்முறையீட்டு நீதிமன்றமாக இது கருதப்படுகிறது.

இதில், காலியாக உள்ள  நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீல் நியோமி ராவை (45) நியமனம் செய்து அதிபர் டிரம்ப்  உத்தரவிட்டார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் இதை அவர் அறிவித்தார். இதையடுத்து, செனட் சபையின் ஒப்புதலுக்காக நியோமியின் நியமன உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

 நியோமி ராவின் பெற்றோர்  இந்தியாவை சேர்ந்த ஜெரின் ராவ், ஜஹாங்கிர் நரியோசாங் ராவ். பார்சி இன தம்பதியான இவர்கள், அமெரிக்காவில் குடியேறினர். அங்கு பிறந்த நியோமி, மிச்சிகனில் உள்ள பள்ளியில் படித்தார். யேல் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், சிகாகோ சட்டக் கல்லூரியில சட்டம் பயின்றார். 

தொடர்ந்து, ஜார்ஜ் மேஷன் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றினார். இவர் தற்போது அமெரிக்காவில் தகவல் தொடர்பு மற்றும் ஒழுங்குமுறை விவகார அலுவலக நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

 இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை செனட் சபை உறுதி செய்தால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக வாழ்நாள் முழுவதும் இவர் பணியாற்றலாம். முன்னதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சீனிவாசன் இந்த நீதிமன்றத்தில் ஒபாமா ஆட்சியின்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 17 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.