|
|||||
மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல... |
|||||
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது, பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலா தனது B ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 'பிசாசு' படத்தின் பெருமளவு படபிடிப்பு காட்சிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தான் இயக்கம் பிசாசு படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் கூறும் போது 'நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ஹாரர் படம் இயக்க வேண்டும் என்று விருப்பம். ரசிகர்களை வெறுமென பயமுறுத்துவது மட்டுமே 'ஹாரர்' படம் அல்ல என்பது என்னுடைய கருத்து ஆகும். பிசாசு பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை , மனதை வருடும் விஷயம் கூடத்தான்.இந்த படத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய பாத்திரங்களுக்கு கூட நான்கு மாதம் பயிற்சிக் கொடுத்து நடிக்க வைத்து உள்ளேன். இந்த படத்தில் மூத்த நடிகர் ராதா ரவி சார் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில், வித்தியாசமாக நடித்து உள்ளார். கதாநாயகனாக அறிமுகம் ஆகிறவர் நாகா,முதல் படத்தில் அவர் காட்டும் உழைப்பும் ஆர்வமும் அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்பதை கட்டாயம் கூறுகிறது. கதாநாயகியாக அறிமுகம் ஆகிறவர் பிரயாகா , கேரளாவில் இருந்து வந்து இருக்கும் அவர் நடன கலைகளில் வல்லவர். 60 அடிக்கும் மேல் உயரத்திலிருந்து ஒரு இரவு முழுவதும் பிசாசாக பறந்து நடித்த காட்சி பிரமிப்பூட்டும். பிரபல ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் இந்த படம் மூலம் ரவி ராய் என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான கோணங்களில் இந்த காட்சிகளை பிரமாதமாக படம் பிடித்து உள்ளார். அறோல் கரேலி என்ற புதிய இசையமைப்பாளரை இந்த படத்தில் அறிமுகபடுத்துகிறேன். எனக்கு வேண்டிய இசை அல்லது நான் கேட்கும் இசை வரும் வரை உழைக்க தயாராக இருக்கிறான். பிசாசு படத்தின் உயிர் நாடி கிளைமேக்ஸ் காட்சிதான். பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய டோனி இந்த காட்சி அமைப்பில் மிரட்டி இருக்கிறார். புதுமுகங்களை வைத்து படமெடுத்தாலும் பட்ஜெட் பெரிது. அந்த சுதந்திரத்தை எனக்கு அளித்த எனது நண்பரும் தயாரிப்பாளருமான பாலாவுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் என மிஸ்கின் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 28 Oct 2014 0 Comments | |||||
Tags: Pisasu Pisasu Movie Mysskin மிஸ்கின் பிசாசு பாலா நாகா | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|