LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஈழத் தமிழர்களுக்கு ‘பாஸ்போர்ட்’! முதல் வரலாற்றுச் சாதனை! இனி எங்கும் பறக்கலாம்!

இலங்கை வரலாற்றில் இதுவரை நடக்காத சரித்திரச் சாதனை இப்போது நடந்துள்ளது. முதன்முறையாகத் தமிழக அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு 'சிறப்பு பாஸ்போர்ட்' வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே 1982 ஆண்டு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அதன் விளைவாக இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறினர்.

 

நார்வே, கனடா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் நாளடைவில் அந்நாட்டுக் குடியுரிமைப் பெற்று அங்கேயே வாழத் தொடங்கி விட்டனர்.

 

அங்குள்ள தமிழர்களுக்கு அனைத்து விதமான குடியுரிமை சுதந்தரமும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர். சுதந்தரமாக நடமாடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. முழு நேரக் கண்காணிப்பில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

200 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியின் மூலம் முதற்கட்டமாக 200 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முதற்கட்டமாக ஈழத்தமிழர்களுக்குச் சிறப்பு பாஸ்போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொடண்டமான், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பாஸ்போர்ட் வழங்கினர்.

 

இப்போது 200 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது விரிவுபடுத்தப்படும்.

 

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கூறும்போது , "ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது.

பல காலமாகத் திரும்பவும் இலங்கைக்கு வந்துவிடலாம் எனப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதைப்போல வெளிநாடுகளில் உள்ள அவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து வாழவும் முயற்சி எடுத்தார்கள். எதுவும் அவர்களுக்குச் சரியாக அமையவில்லை.

 

இந்தியக் குடியுரிமை வேண்டித் தொடர்ந்து போராடினார்கள். இந்தியச் சட்டப்படி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கமுடியாத சூழல் இருந்தது. ஆகவே, இலங்கையில் ஆட்சி செய்த பல அதிபர்களிடம் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கைகளில் நடைமுறைப்படுத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டன.

 

இப்போது உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நான் ஆளுநராகப் பொறுப்பேற்ற உடன் மீண்டும் கோரிக்கைவைத்தேன். கனடா, ஆஸ்திரேலியா, நார்வே சென்றவர்கள் அந்தந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்கள்.

 

இந்தியாவில் வசித்து வந்த 1 லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கடமையாக இருந்தது.

 

இப்போது அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்துள்ளோம். இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 'இலங்கை அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டு' அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவுகாலம்

 

இதன் மூலம் இந்தியாவில் எப்படி இந்தியப் பிரஜைகள் வாழ்கிறார்களோ, இலங்கையில் எப்படி இலங்கை பிரஜைகள் வாழ்கிறார்களோ அதைப்போன்று இந்த இந்திய இலங்கைத் தமிழர்களும் அவர்கள் விரும்பும் நாட்டிற்குச் செல்லலாம். அங்கேயே தங்கி பணிபுரியலாம்.

 

இந்தியாவில் உள்ள இலங்கை அகதி மறுவாழ்வு முகாம்களில் வாழும் 1 லட்சத்திற்கும் மேலான தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவுகாலம் கிடைத்துள்ளது.

 

இதற்காக உதவிய முதல்வர் ஸ்டாலினுக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி" என்றார்

by Kumar   on 20 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.