|
|||||
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு இனி புத்தக வடிவில் கிடைக்காது !! |
|||||
உலகிலேயே மிகப் பிரபலமான ஆங்கில அகராதியான ஆக்ஸ்போர்டு. இனி புத்தக வடிவில் கிடைக்காதாம், அதை இ-புக் வடிவில் ஆன் லைனிலேயே வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டு அகராதியில் ஒவ்வொரு கால இடைவெளியிலும் புதிய புதிய வார்த்தைகளை சேர்த்து புதிய பதிப்புகளாக வெளியிடுவது வழக்கம். ஆனால், புதிய புதிய வார்த்தைகள் அதிகமாகும் போது அதன் பக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அடுத்த புதிய பதிப்பு குறித்து ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்திய போது, ஏராளமான புதிய சொற்களை சேர்க்க வேண்டி அவசியம் ஏற்பட்டது. அப்படி புத்தகமாக வெளியிட்டால் பக்கங்கள் எக்கச்சக்கமாக அதிகரித்து விடும். அவ்வளவு பெரிய புத்தகத்தை அச்சடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என ஆக்ஸ்போர்டு அகராதி பதிப்பக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிய வார்த்தைகளின் சேர்க்கை காரணமாக அதன் பக்கங்கள் மிகவும் அதிகரித்து விட்டன. எனவே எதிர்காலங்களில் இவற்றை அச்சில் கொண்டுவர முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இவற்றை தொடர்ந்து ஆன்லைனிலேயே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய பதிப்பு வரும் 2034ல் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
|||||
by Swathi on 23 Apr 2014 0 Comments | |||||
Tags: Oxford Dictionary E-Book ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ஆங்கில அகராதி | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|