LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் முதன்முதலாக நீலகிரி வரையாடுகள் தினம் கடைபிடிப்பு

வரையாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிய வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள், நீலகிரி வரையாடுகள் தினமாக 7-10-2023- ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது.
************************************************
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பிறந்த டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார், 1960-களில் நீலகிரி வரையாடுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கியவர். அவர் 1963-ம் ஆண்டு நீலகிரி நிலப்பரப்பில் நீலகிரி வரையாடுகளின் முதல் கணக்கெடுப்பை மேற்கொண்டார். நீலகிரியில் 38 விலங்குகளைக் கொண்ட மிகப்பெரிய மந்தை உட்பட சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.
****************************************
1975-ம் ஆண்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் நீலகிரி வரையாடுகள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு, காடுகளில் சுமார் 2200 வரையாடுகள் உள்ளதாக அவர் மதிப்பிட்டார். நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு பற்றி விஸ்பர்ஸ் ஃப்ரம் தி வைல்ட், தி சீட்டல் வாக் - லிவிங் இன் தி ஜங்கிள், த தோடாஸ் அண்ட் தி தஹ்ர் போன்ற பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார்.
********************************************
இது தோடா பழங்குடியின மக்களுக்கும், நீலகிரி வரையாட்டுக்கும் இடையிலான தொடர்பை சித்தரிக்கிறது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராகவும், வனவிலங்கு பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞராகவும் டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார் இருந்தார்.
********************************************* 
1981-க்கு பின்னர் வன விலங்குகளை பாதுகாப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் தாவீதார் அர்ப்பணித்தார். இவருடன், ஜார்ஜ் தாவீதார் (உயிரியலாளர்) என்பவரும் இணைந்து வரையாடுகள் பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டனர். ஏப்ரல் 2010-ல் புதுச்சேரியில் தாவீதார் காலமானார். இவரின் பிறந்த நாளான அக்டோபர் 7-ம் தேதி நீலகிரி வரையாடுகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
************************************************
இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறியதாவது, "தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஓரிடவாழ் பாலூட்டியாகும். வரையாடுகள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, களக்காடு-முண்டந்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை ஆகிய புலிகள் காப்பகங்கள், சிறுவாணி மலைகளில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் காணப்படுகின்றன.
*****************************************************
‘மலைப் பாதுகாவலர்கள்’ என்று அழைக்கப்படும் வரையாடுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவதிலும், மனித குலத்தின் உயிர்வாழ்வுக்கான முக்கிய தனித்துவமான சோலை-புல்வெளி சுற்றுச்சூழலைப் பராமரிப்பதிலும் உதவுகின்றன.
***************************
கடந்த 2023-ம் ஆண்டுமுதல் அக்டோபர் 7-ம் தேதி வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள் நீலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுமென தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முதன்முதலாக 7-10-2023- ம் தேதி முதல் வரை யாடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ‘நீலகிரி வரையாடுகள் திட்டம்’ என்ற ஐந்தாண்டு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது, என்றனர்.

வரையாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிய வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள், நீலகிரி வரையாடுகள் தினமாக 7-10-2023- ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பிறந்த டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார், 1960-களில் நீலகிரி வரையாடுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கியவர். அவர் 1963-ம் ஆண்டு நீலகிரி நிலப்பரப்பில் நீலகிரி வரையாடுகளின் முதல் கணக்கெடுப்பை மேற்கொண்டார். நீலகிரியில் 38 விலங்குகளைக் கொண்ட மிகப்பெரிய மந்தை உட்பட சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.

 டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார்

1975-ம் ஆண்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் நீலகிரி வரையாடுகள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு, காடுகளில் சுமார் 2200 வரையாடுகள் உள்ளதாக அவர் மதிப்பிட்டார். நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு பற்றி விஸ்பர்ஸ் ஃப்ரம் தி வைல்ட், தி சீட்டல் வாக் - லிவிங் இன் தி ஜங்கிள், த தோடாஸ் அண்ட் தி தஹ்ர் போன்ற பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

இது தோடா பழங்குடியின மக்களுக்கும், நீலகிரி வரையாட்டுக்கும் இடையிலான தொடர்பை சித்தரிக்கிறது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராகவும், வனவிலங்கு பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞராகவும் டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார் இருந்தார்.

1981-க்கு பின்னர் வன விலங்குகளை பாதுகாப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் தாவீதார் அர்ப்பணித்தார். இவருடன், ஜார்ஜ் தாவீதார் (உயிரியலாளர்) என்பவரும் இணைந்து வரையாடுகள் பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டனர். ஏப்ரல் 2010-ல் புதுச்சேரியில் தாவீதார் காலமானார். இவரின் பிறந்த நாளான அக்டோபர் 7-ம் தேதி நீலகிரி வரையாடுகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

மலைப் பாதுகாவலர்கள்

இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறியதாவது, "தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஓரிடவாழ் பாலூட்டியாகும். வரையாடுகள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, களக்காடு-முண்டந்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை ஆகிய புலிகள் காப்பகங்கள், சிறுவாணி மலைகளில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் காணப்படுகின்றன.

‘மலைப் பாதுகாவலர்கள்’ என்று அழைக்கப்படும் வரையாடுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவதிலும், மனித குலத்தின் உயிர்வாழ்வுக்கான முக்கிய தனித்துவமான சோலை-புல்வெளி சுற்றுச்சூழலைப் பராமரிப்பதிலும் உதவுகின்றன.

கடந்த 2023-ம் ஆண்டுமுதல் அக்டோபர் 7-ம் தேதி வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள் நீலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுமென தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முதன்முதலாக 7-10-2023- ம் தேதி முதல் வரை யாடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ‘நீலகிரி வரையாடுகள் திட்டம்’ என்ற ஐந்தாண்டு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது, என்றனர்.

by Kumar   on 09 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.