LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

போரில் நடக்கும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய 2 பேருக்கு நோபல் பரிசு!

போரில் நடக்கும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய2 பேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு  நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 

இதில், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. மிக உயரிய இவ்விருதுக்கு 131 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.  அதில் காங்கோ டாக்டர் டெனிஸ் மக்வெஜ், ஈராக்கின் யாசிடி இன பெண் ஆர்வலரான நாடியா முராட் ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

போரில் பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர இருவரும் மேற்கொண்ட முயற்சிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈரானின் சின்ஜார் நகரை சேர்ந்த யாசிடி இனத்தை சேர்ந்தவர் 25 வயது பெண் நாடியா முராட்.  கடந்த 2014 ல் சின்ஜார் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய போது இவர் பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்திச் செல்லப்பட்டார். அங்கு 3 மாதங்கள் தீவிரவாதிகளால் கூட்டு பலாத்காரம், பாலியல் வன்முறை, தாக்குதல்களுக்கு ஆளாகி தப்பி வந்தார். 

அதன்பிறகு, போரினால் ஆண்கள் கொல்லப்படும் நிலையில், பெண்கள் எந்த அளவுக்கு பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள், சிறுவர், சிறுமிகளுக்கு நேர்ந்திடும் கொடுமைகள் குறித்து உலகிற்கு முராட் வெளிப்படுத்தினார்.

மேலும், தனது யாசிடி இன மக்களுக்காகவும், போரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாலியல் அடிமைகளுக்கான ஐநா.வின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.

காங்கோ நாட்டை சேர்ந்த 63 வயதான டாக்டர் டெனிஸ் மக்வெஜ், கடந்த 20 ஆண்டுகளாக பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனது மருத்துவ சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அளித்து வருகிறார்.  கடந்த 1999ம் ஆண்டு தெற்கு கிவு பகுதியில் மருத்துவமனையை நிறுவி, அதில், போரில் பலாத்கார வன்முறைக்கு ஆளாகும், பெண்கள், சிறுமிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் சுமார் 3,500 பெண்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறார். மக்வெஜ், முராட் இருவருக்கும் அக்டோபர் 10ம் தேதி ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

by Mani Bharathi   on 08 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.