LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சினிமாவை பற்றி மயில்சாமி அண்ணாதுரை கருத்து !!

புதுமுக நாயகன் ப்ரணவ் நடித்து வெளிவரவிருக்கும் படம் நதிகள் நனைவதில்லை. இப்படத்தை நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி, தயாரித்துள்ளார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அவருடன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி சேகரன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ் விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், என்னை இந்த விழாவுக்கு அழைத்தபோது நமக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தயங்கினேன். ஆனாலும் இப்பட இயக்குனர் என்னை கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். அதன்பிறகுதான் ஜூலை 20ந்தேதி 4.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் விழாவை முடித்துக்கொள்ளுங்கள். காரணம், இரவு 9.50 க்கு எனக்கு பிளைட் என்றேன்.


அதோடு, முதலில் அவரது கட்டாயத்துக்காக சினிமா பட ஆடியோ விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தாலும், அதன்பிறகுதான் சினிமா என்பது அறிவியலின் இன்னொரு அங்கம் என்பதை எண்ணிக்கொண்டேன். நானும் டூரிங் தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்த்தவன்தான்.எம்.ஜிஆரின் சண்டை காட்சிகளை விரும்பிப்பார்ப்பேன்.

 

அதேபோல் இந்த விழாவுக்கு வந்திருக்கும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் முரட்டுக்காளை உள்ளிட்ட பல படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த சினிமாவில் இருந்து இன்றைக்கு எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கிறது. இது அறிவியல் வளர்ச்சியின் அடையாளம்தான். மேலும், எஙகோ இருக்கும் மனிதனை கண்முன் கொண்டு நிறுத்தும் ஆற்றல் விஞ்ஞானத்துக்கு மட்டுமே உண்டு.


2008ம் வருடம் ஆகஸ்டு மாதம் சந்திராயன் விண்கலம் என் தலைமையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது நான் இருந்த பதபதப்பான மனநிலையில்தான் இந்த படத்தின் இயக்குனரான பிசி.அன்பழகனும் இப்போது இருக்கிறார்.

 

ஆனால் எங்களது டீமுக்கு சந்திராயன் வெற்றியை கொடுத்தது போன்று, இந்த நதிகள் நனைவதில்லை என்ற படமும் அன்பழகன் டீமுக்கு வெற்றியை கொடுக்கும். அதோடு, என்னைப்பொறுத்தவரை சந்திராயனாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, எழுத்தாக இருந்தாலும் சரி எல்லாமே படைப்புதான். அந்த வகையில் இந்த படைப்பும் மக்களால் வரவேற்கப்பட வேண்டும். வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

சினிமாவை பற்றி மயில்சாமி அண்ணாதுரை கருத்து !!
புதுமுக நாயகன் ப்ரணவ் நடித்து வெளிவரவிருக்கும் படம் நதிகள் நனைவதில்லை. இப்படத்தை நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி, தயாரித்துள்ளார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி சேகரன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ் விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், என்னை இந்த விழாவுக்கு அழைத்தபோது நமக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தயங்கினேன். ஆனாலும் இப்பட இயக்குனர் என்னை கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். அதன்பிறகுதான் ஜூலை 20ந்தேதி 4.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் விழாவை முடித்துக்கொள்ளுங்கள். காரணம், இரவு 9.50 க்கு எனக்கு பிளைட் என்றேன்.
அதோடு, முதலில் அவரது கட்டாயத்துக்காக சினிமா பட ஆடியோ விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தாலும், அதன்பிறகுதான் சினிமா என்பது அறிவியலின் இன்னொரு அங்கம் என்பதை எண்ணிக்கொண்டேன். நானும் டூரிங் தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்த்தவன்தான்.எம்.ஜிஆரின் சண்டை காட்சிகளை விரும்பிப்பார்ப்பேன். அதேபோல் இந்த விழாவுக்கு வந்திருக்கும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் முரட்டுக்காளை உள்ளிட்ட பல படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த சினிமாவில் இருந்து இன்றைக்கு எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கிறது. இது அறிவியல் வளர்ச்சியின் அடையாளம்தான். மேலும், எஙகோ இருக்கும் மனிதனை கண்முன் கொண்டு நிறுத்தும் ஆற்றல் விஞ்ஞானத்துக்கு மட்டுமே உண்டு.
2008ம் வருடம் ஆகஸ்டு மாதம் சந்திராயன் விண்கலம் என் தலைமையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது நான் இருந்த பதபதப்பான மனநிலையில்தான் இந்த படத்தின் இயக்குனரான பிசி.அன்பழகனும் இப்போது இருக்கிறார். ஆனால் எங்களது டீமுக்கு சந்திராயன் வெற்றியை கொடுத்தது போன்று, இந்த நதிகள் நனைவதில்லை என்ற படமும் அன்பழகன் டீமுக்கு வெற்றியை கொடுக்கும். அதோடு, என்னைப்பொறுத்தவரை சந்திராயனாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, எழுத்தாக இருந்தாலும் சரி எல்லாமே படைப்புதான். அந்த வகையில் இந்த படைப்பும் மக்களால் வரவேற்கப்பட வேண்டும். வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
by Swathi   on 22 Jul 2014  0 Comments
Tags: Nathigal Nanaivathillai Movie   Nathigal Nanaivathillai Music Release Function   Mylswamy Annadurai   மயில்சாமி அண்ணாதுரை           
 தொடர்புடையவை-Related Articles
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
நதிகள் நனைவதில்லை படத்தைப் பார்த்து பாராட்டிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை !! நதிகள் நனைவதில்லை படத்தைப் பார்த்து பாராட்டிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை !!
மயில்சாமி அண்ணாதுரை (வானியல்) மயில்சாமி அண்ணாதுரை (வானியல்)
சினிமாவை பற்றி மயில்சாமி அண்ணாதுரை கருத்து !! சினிமாவை பற்றி மயில்சாமி அண்ணாதுரை கருத்து !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.