|
||||||||
ஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி!! |
||||||||
நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் மாநகர துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் பிறந்த இவர், மூன்று வயதில் நார்வேயில் குடியேறினார். தற்போது அவருக்கு வயது 27 ஆகும்.
கான்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து ஒஸ்லோ நகரை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நோர்வேயின் தொழிற்கட்சி தலைமையிலான, பசுமை, சோசலிச கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியுள்ளது. சோசலிச இடதுசாரிக் கட்சியின் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான, மரியன் போகன், ஒஸ்லோ மாநகர முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அவருக்குக் கீழ், ஹம்சாயினி குணரத்தினம், பிரதி நகரமுதல்வராகப் பணியாற்றவுள்ளார். ஹம்சாயினி குணரத்தினம், 2011ஆம் ஆண்டு, நோர்வேயின் உடோயா தீவில் நடந்த தொழிற்கட்சியின் கோடைகால முகாமின் மீது துப்பாக்கி தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில், உயிர் பிழைத்து, நீந்திக் கரையேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் மாநகர துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் பிறந்த இவர், மூன்று வயதில் நார்வேயில் குடியேறினார். தற்போது அவருக்கு வயது 27 ஆகும். கான்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து ஒஸ்லோ நகரை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நோர்வேயின் தொழிற்கட்சி தலைமையிலான, பசுமை, சோசலிச கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியுள்ளது. சோசலிச இடதுசாரிக் கட்சியின் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான, மரியன் போகன், ஒஸ்லோ மாநகர முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்குக் கீழ், ஹம்சாயினி குணரத்தினம், பிரதி நகரமுதல்வராகப் பணியாற்றவுள்ளார். ஹம்சாயினி குணரத்தினம், 2011ஆம் ஆண்டு, நோர்வேயின் உடோயா தீவில் நடந்த தொழிற்கட்சியின் கோடைகால முகாமின் மீது துப்பாக்கி தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில், உயிர் பிழைத்து, நீந்திக் கரையேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
||||||||
by Swathi on 14 Oct 2016 0 Comments | ||||||||
Tags: Khamshajiny Gunaratnam Hamshayini Oslo Deputy Mayor Srilankan Tamil Women Tamil Women ஒஸ்லோ ஹம்சாயினி குணரத்தினம் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|