LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செய்திச் சுருக்கம் (சூலை மாதம்,2019)

  • சென்னை புதுச்சேரி இடையே சொகுசுக் கப்பல் இயக்க உரிமம் தரப்படும். நாராயணசாமி அறிவிப்பு. 
  • தினகரனை ஆதரவு MLA  ரத்தினசபாபதி எம்எல்ஏ முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அஇஅதிமுகவில் இணைந்தார் 
  • தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில், தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை. அமைச்சர் பாண்டியராசன் அறிவிப்பு.
  • உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் சிகாகோ நகரில் சிறப்பாக நடந்தது.  
  • ‘அமெரிக்கா மிரட்டலால் பயம் இல்லை; ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை’ - இந்தியா திட்டவட்ட அறிவிப்பு
  • `வங்கித் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்!'  நிதியமைச்சர் நிர்மலா அறிவிப்பு
  • நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தல். வைகோ, நில்சன் மற்றும் சண்முகம் உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள். 
  • VIT விஸ்வநாதன் அவர்கள் பதிப்பித்துள்ள 46000 பெயர்கள் கொண்ட சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள் நூல் சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் வெளியீடு
  • எழும்பூர் தொடரி நிலையத்தின் மேற்கு நுழை வாயிலில் இருந்த 
  • அடையாறு ஆனந்த பவன் உட்பட அனைத்துக் கடைகளும் இன்று இடிக்கப்பட்டன.இங்கே புதிதாக மற்றொரு நடைமேடை அமைகின்றது.
  • சாலை விபத்துகளைத் தடுக்க,டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதைக் கட்டாயமாக்க இந்திய நடுவண் அரசு திட்டம்.
  • திருமணத்துக்கு முன்பு எச் ஐ வி சோதனை கட்டாயம்.கோவாவில் சட்டம் இயற்ற பரிசீலணை.
  • சென்னையில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பத்து குற்றவாளிகள் சென்னை அதிரடி தனிப்படையினரால் கைது.
  • 3,968 மருத்துவஇடங்களும் தமிழக மாணவர்களுக்குத் தான் ஒதுக்கப்படும். அமைச்சர் விஜயபாஸ்கர்
  • வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வெளியீடு 
  • உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து 
  • புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
  • டெல்லி வகுப்புஅறைகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவ, தடை கோரும் மனு:  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
  • மராத்தா வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை, பின் தேதியிட்டுக் கொண்டு வர முடியாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • எல்லைக்கு அருகில் இந்தியா நிறுத்தி  இருக்கின்ற போர் வானூர்திகளை, பின்நகர்த்தும்வரை, வான்வெளியைத்  திறக்க முடியாது. பாகிஸ்தான்.
  • விண்ணப்பிக்காமலேயே அனைத்து சான்றுகளும் கிடைக்கும்; ‘மக்களைத் தேடி அரசு’: ரூ.90 கோடியில் புதிய திட்டம். சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.
  • தெற்குத் தொடரி திட்டங்களுக்கு 4118 கோடி ஒதுக்கீடு
  • பச்சை அட்டை (Green Card) வழங்குவதை  உயர்த்த அமெரிக்க நாடாளுமன்றம் காங்கிரஸ் அவை ஒப்புதல் ஆதரவு 365 எதிர்ப்பு 65
  • பாரத ஸ்டேட் வங்கி மேலாண் இயக்குநர் அன்சுலா காந்த்,  உலக வங்கியின் மேலாண் இயக்குநர் ஆகிறார்.
  • இந்தியாவில் ஒட்டு மொத்த மருத்துவர்கள் எண்ணிக்கை 11,59,309

மராட்டியம்-1,73,384 ,தமிழ்நாடு -1,35,456, கர்நாடகம் - 1,22,875, ஆந்திரப் பிரதேசம்-1,00,587, உத்தரப் பிரதேசம்- 77,549

  • வட துருவத்தில் இருந்து தென் துருவம், மீண்டும் வட துருவம் 46 மணி 39 நிமிடங்களில் தரை இறங்காமல் வலம் வந்து கட்டார் வானூர்தி சாதனை.
  • 30 ஆண்டுகளாக நாள்தோறும் 5 நிமிடங்கள்ஒலித்த, உலகின் ஒரே லத்தீன் செய்திஅறிக்கையை ஃபின்லாந்து  வானொலி நிறுத்திவிட்டது
  • மீன்கள் கண்களை  மூட முடியாது. ஆனால் Zebra என்ற மீன் மட்டும் மனிதர்களைப் போலவே உறங்குவது கண்டுபிடிப்பு.
  • 'பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறோம் தயாராக இருங்கள்': வாஜ்பாய் கூறியதை நினைவுகூர்ந்த யஷ்வந்த் சின்ஹா
  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை நடைபெறாத அரிய நிகழ்வு 
  • இறுதிப் போட்டி சமன். சூப்பர் ஓவர் சமன். அதிக பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி.
  • அடுத்த தலாய்லாமாவை நாங்களே தேர்வு செய்வோம். இந்தியா தலையிடக்கூடாது. சீனா மறைமுக எச்சரிக்கை.
  • பலுசிஸ்தானில் தங்கம் தோண்டும்  சிலி நிறுவன ஒப்பந்தத்தை விலக்கிய பாகிஸ்தான் 41,000 கோடி தர வேண்டும். உலக நடுவர் மன்றம் தீர்ப்பு
  • இந்தியாவில் தற்போது  4 லட்சம் மின் வண்டிகள் ஓடுகின்றன. பாதி டெல்லி உத்தரப்பிரதேசத்தில்.  நிதின் கட்கரி பேட்டி
  • ஹூண்டாய் கோனா. இந்தியாவின் முதலாவது மின்சார எஸ்யுவி கார் அறிமுகம்.
  • உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை 56,695. போதிய விவரம் இல்லாமல் பத்து ஆண்டுகளாக உள்ள 900 வழக்குகள் தள்ளுபடி.
  • உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும், அரசியல் சட்டத்தை  மீறி விட்டன. ஸ்டாலின் குற்றச்சாட்டு.
  • 9 மாதங்களில் முதன் முறையாக கடந்த மாதம் இந்திய ஏற்றுமதி 10 விழுக்காடு குறைந்தது.
  • என் கடவுளே (My Lord)  என்று நீதிபதிகளை அழைக்கக் கூடாது.  சார் என்று அழைத்தால் போதும். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு
  • உலகைப் பாதுகாக்க வேண்டுமானால் யானைகளைக் காப்பாற்றுங்கள். Nature Geo Science வேண்டுகோள்.
  • பிரெஞ்சுப் படையில் பறக்கும் வீரர்கள்.குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரன் முன்னிலையில் அறிமுகம்
  • விதிமீறல்கள். பாரத ஸ்டேட் வங்கிக்கு  7 கோடி அபராதம் விதித்தது கருவூல வங்கி.
  • எம்.பி.பி.எஸ். தமிழகத்தைச் சேராத  22 மாணவர்கள் நேற்று தகுதி நீக்கம்.
  • 11 ஆவது உலகத்தமிழ் மாநாடு, 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
  • 299 கோடி செலவில், கிழக்குக் கடற்கரைச் சாலை ஆறு வழி ஆகின்றது.
by Swathi   on 24 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.