ஆனந்த் இயக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் சசி இயக்குகிறார். இந்த படத்துக்கு சசி ’பிச்சைக்காரன்’ என்று டைட்டில் சொன்னதும். விஜய் ஆண்டனி இந்த டைட்டில் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக வேறு டைட்டில் வைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பின் தன் நண்பர்களிடம் இந்த டைட்டிலை பற்றி கருத்து கேட்டாராம் இது போல் டைட்டில் வைத்தால் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்று சொன்னார்களாம். அதனால் தற்போது இப்படத்தின் டைட்டிலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் விஜய் ஆண்டனி.
இந்த படத்திற்கு அவரே இசையமைத்து வரும் நிலையில் மெகா ஹிட் பாடலான ‘நாக்க முக்கா’ பாணியில் ஒரு பாடலையும் சில மெலோடி பாடல்களையும் உருவாக்கி உள்ளாராம். தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறதாம்
|