நாற்பது வயதை கடந்த முன்னாள் நடிகைகள் கூட, அம்மா கதாபாத்திரம் என்றால் நடிக்க தயங்கி வரும் இந்த சூழ்நிலையில், 22 வயதே ஆன அமர காவியம் பட நாயகி மியா ஜார்ஜ் ஏழு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்து வருகிறாராம்.
கே.என்.சசிதரன் இயக்கத்தில் 'நயனா' என்ற மலையாளப் படத்தில்தான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் நம்ம மியா ஜார்ஜ். இந்தப் படத்தின் கதை மியாவை மிகவும் கவர்ந்ததால் அம்மாவாக நடிக்க உடனே சம்மதித்தாராம்.
மியா ஜார்ஜ் அமர காவியம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்திருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|