2015ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் சுமார் பத்தாயிரம் பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2015 ம் ஆண்டில் நடைபெற இருக்கும் முக்கிய தேர்வுகளின் விவரங்கள் குறித்து கூறியிருப்பதாவது,
பதவியின் பெயர் : இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்
காலிப்பணியிடங்கள் : 4
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல் 26-ந்தேதி
குரூப்-2 (நேர்முகத்தேர்வு)
காலிப்பணியிடங்கள் : 904
அறிவிப்பு வெளியாகும் தேதி : பிப்ரவரி 3-வது வாரம்
முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : மே மாதம் 10-ந் தேதி
மெயின்தேர்வு நடைபெறும் நாள் : செப்டம்பர் 26-ந் தேதி
குரூப் 3 (நேர்முகத்தேர்வு)
காலிப்பணியிடங்கள் : 25
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : மார்ச் மாதம் முதல் வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : மே மாதம் 17-ந்தேதி நடத்தப்படும்.
பதவியின் பெயர் : உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவர்கள்
காலிப்பணியிடங்கள் : 74
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : பிப்ரவரி 2-வது வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : மே மாதம் 31-ந் தேதி
பதவியின் பெயர் : சிறைச்சாலை அதிகாரி, உதவி சிறைச்சாலை அதிகாரி, துணை சிறைச்சாலை அதிகாரி
காலிப்பணியிடங்கள் : 5
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : மார்ச் மாதம் 4-வது வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : ஜூன் மாதம் 14-ந்தேதி
பதவியின் பெயர் : புள்ளியியல் புலன்ஆய்வாளர்கள்(ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்கள்)
காலிப்பணியிடங்கள் : 268
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : மார்ச் மாதம் 4-வது வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : ஜூன் 20-ந்தேதி
குரூப்-1 தேர்வு
காலிப்பணியிடங்கள் : 47
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : ஏப்ரல் முதல் வாரம்
முதல் நிலைத்தேர்வு ஜூலை 5-ந் தேதியும், மெயின்தேர்வு டிசம்பர் 5-ந் தேதி முதல் 7-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
குரூப்-2 ஏ (நேர்முகத்தேர்வு இல்லாதது)
காலிப்பணியிடங்கள் : 564
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : மே மாதம் 2-வது வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : ஆகஸ்டு 16-ந்தேதி
வட்டார சுகாதார புள்ளியியல் நிபுணர்கள்(பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்ட்சியன்)
காலிப்பணியிடங்கள் : 36
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : ஏப்ரல் மாதம் 4-வது வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : ஜூலை மாதம் 12-ந்தேதி
வன பயிற்சியாளர் (பாரஸ்ட் அப்ரண்டிஸ்)
காலிப்பணியிடங்கள் : 27
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : ஜூலை மாதம் 3-வது வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : அக்டோபர் மாதம் 31-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர்
காலிப்பணியிடங்கள் - அறிவிக்கப்படவில்லை
தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் தேதி : ஜூலை முதல் வாரம்
தேர்வு நடைபெறும் நாள் : அக்டோபர் மாதம் 4-ந் தேதி
குரூப் -4
காலிப்பணியிடங்கள் - அறிவிக்கப்படவில்லை
தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு நவம்பர் 15-ந் தேதி நடைபெறும்.
|