|
||||||||
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !! |
||||||||
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் காலியாக உள்ள Executive Officer Grade III மற்றும் IV ஆகிய பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Executive Officer, Grade - IV காலியிடங்கள் : 49 சம்பள விகிதம் : 5,200 - 20,200 வயது வரம்பு : 1.7.2016 தேதிப்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். MBC/BC பிரிவினர்களுக்கு இரண்டு வருடங்களும், SC/ST/SCA பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு தலா பத்து வருடங்களும், Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது UGC யால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் புலவர் சான்று பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Executive Officer, Grade-III காலியிடங்கள் : 29 வயதுவரம்பு : 01.07.2016 தேதிப்படி பொதுப்பிரிவினர்கள் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதரப் பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. கல்வித்தகுதி : Arts/Science/Commerce பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துதேர்வு நடைபெறும் நாள் : 1. Executive Officer - Grade III பணிக்கு 29.04.2017 2. Executive Officer - Grade IV பணிக்கு 30.04.2017 விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் (One Time Registration) ரூ.50, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.12.2016 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 27.12.2016 |
||||||||
by Swathi on 10 Dec 2016 1 Comments | ||||||||
Tags: TNPSC TNHRCE Executive Officer Notification Executive Officer Notification தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை எக்சிகியூடிவ் ஆபிசர் இந்து அறநிலையத் துறை | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|