இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) கீழ்கண்ட பணிகளுக்கான 313 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறன்றன.
காலியிட விபரம் : உதவியாளர் பிரிவில் ஆமதாபாத்தில் 20, பெங்களூருவில் 97, ஐதராபாத்தில் 27, டில்லியில் 4, ஸ்ரீஹரிகோட்டாவில் 35, திருவனந்தபுரத்தில் 89 என 272 பணியிடங்களுக்கும், கிளார்க் பிரிவில் பெங்களூருவில் 2 இடமும், விண்வெளி துறையின் கீழ் உதவியாளர் பிரிவில் ஆமதாபாத் 16, பெங்களூரு 7, ஐதராபாத் 1, டில்லி 14, திருவனந்தபுரம் 1 என 39 பணியிடங்களும் என மொத்தம் 313 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அடிப்படையில் 18 - 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதிலிருந்து ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்புடைய தகுதியும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் மூன்று விதமான பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒரே பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பக் கட்டணம் : 100 ரூபாய். இதனை பாரத ஸ்டேட் வங்கிக் கிளை அல்லது ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 15.10.2017
தேர்வு மையங்கள் : அகமதாபாத், பெங்களூரு, சென்னை. டெஹ்ராடூன், கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, புதுடெல்லி, திருவனந்தபுரம். தேர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2017
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
|