|
||||||||
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... |
||||||||
IDBI வங்கியல் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Executive காலியிடங்கள் : 500 (UR - 245, OBC - 130, SC - 85, ST - 40) இதில் 26 இடங்கள் PWD பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் (SC/ST/PWD பிரிவினர்களுக்கு 55% மதிப்பெண்கள்) இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம் / ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத்தேர்வின் போது கீழ்க்கண்ட சான்றிதழ்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள் மற்றும் அசலை சமர்ப்பிக்கவேண்டும். 1. வயது சான்றிதல். 2. கல்வித்தகுதி சான்றிதல்கள் (Semester Wise) 3. பணி அனுபவ சான்றிதல். 4. ஜாதி சான்றிதல் 5. முகவரிக்கான அடையாள அட்டை. 6. விண்ணப்ப படிவம் & விண்ணப்பக் கட்டண ரசீது. தமிழ்நாட்டில் ஆன்லைன் எழுத்துதேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோயம்பத்தூர், மதுரை. தேர்வு நடைபெறும் நாள் : 06.01.2017 பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மூன்று ஆண்டு காலம் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவர். பின்பு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு நிரந்தரமாக அமர்த்தப்படுவர். தற்காலிக பணியின் போது உதவித் தொகை வழங்கப்படும். முதல் வருடம் ரூ.17,000, இரண்டாம் வருடம் ரூ.18,500, மூன்றாம் வருடம் 20,000 வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.700 (SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2016 |
||||||||
by Swathi on 19 Nov 2016 0 Comments | ||||||||
Tags: IDBI Job IDBI Recruitment IDBI Executive Recruitment Bank Jobs வங்கி வேலைவாய்ப்பு IDBI வங்கி | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|