|
||||||||
கரன்சி நோட்டு அச்சகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்... |
||||||||
நாசிக்கில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Currency Note Press-ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Junior Office Assistant காலிப்பணியிடங்கள் : 15 (UR-9, OBC-4,SC-1,ST-1) சம்பளவிகிதம் : 5,200 - 20,200 வயதுவரம்பு : 30.12.2016 தேதிப்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும்,SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு தலா பத்து வருடங்களும் Ex-SM/விதவைகள் பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்று கணினி திறனறிவும் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தொழிற்திறன் தேர்வு (Skill Test) மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் Logical Reasoning, General Awareness, English Language, Computer Knowledge, Numerical Ability பாடப்பிரிவுகளிலிருந்து 200 மதிப்பெண்களுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : ஜனவரி 2017 / பிப்ரவரி 2017 விண்ணப்பக் கட்டணம் : ரூ.350 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் http://cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.12.2016 |
||||||||
by Swathi on 10 Dec 2016 0 Comments | ||||||||
Tags: அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Office Assistant Office Assistant Recruitment Office Assistant Jobs Currency Note Press Currency Note Press Latest Jobs | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|