|
|||||
உலகின் அதிகார மிக்க சீக்கியர்கள் பட்டியல் - மன்மோகன் சிங் முதலிடம் !! |
|||||
உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார்.
உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்களின் பட்டியல் லண்டனில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பிடித்துள்ள பிரபல சீக்கியர்கள் பற்றி இங்கு காண்போம்.
முதல் இடம் - உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார். மன்மோகன் ஒரு சிறந்த சிந்தனையாளர், அறிஞர் என்று பாராட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது இடம் - திட்டக் கமிஷன் துணை தலைவரான மான்டெக் சிங் அலுவாலியா உலகின் இரண்டாவது அதிகாரமிக்க சீக்கியராக உள்ளார்.
மூன்றாவது இடம் - சீக்கிய மத தலைவரான ஜாதேதர் சிங் சாஹிப் கியானி குர்பசன் சிங் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
நான்காவது இடம் - பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல், இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
13 வது இடம் - பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரண் கௌர் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார்.
28வது இடம் - இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் 28வது இடம் கிடைத்துள்ளது. |
|||||
by Swathi on 10 Nov 2013 0 Comments | |||||
Tags: Manmohan Most Powerful Sikh Manmohan Singh அதிகார மிக்க சீக்கியர்கள் மன்மோகன் சிங் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|