தமிழ் சினிமாவை பொறுத்த வரை வாரம் தோறும் பல படங்கள் திரையரங்குகளில் களம் இறங்குகிறது.
இதில் இந்த வார வெள்ளிக்கிழமை மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் இந்த வாரம் பெண் இயக்குனர்களின் இயக்கத்தில் இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன. தனுஷ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் அம்மா கணக்கு படம் அஸ்வினி ஐயர் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது, அதேபோல் கலையரசன் நடிக்கும் ராஜா மந்திரி படத்தை உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
பெண் இயக்குனரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இறுதி சுற்று போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவதால், ரசிகர்கள் மத்தியில் இவ்விரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
|