கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாவதாக இருந்தது, ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி லிங்கா' படத்தின் இசை வெளியீடு நவம்பர் 9ல் நடக்கிறதாம்.
லிங்கா படத்தின் அறிமுகப் பாடலுக்காக சீனாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மகாவ்விலும் மற்றும் இப்பாடலுக்கான இதர காட்சிகளை அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற பகுதிகளிலும் படமாக்க உள்ளனர். இதை முடித்துவிட்டு விரைவில் இந்தியா திரும்பும் படக்குழு இசை வெளியீடு மற்றும் டீஸர் வெளியீட்டுப் பணிகளைப் துவக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
|