LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

குதிரைவாலி கேப்பைக் கூழ்

தேவையானவை :

1. கேழ்வரகு மாவு - 200 கிராம்

2. குதிரைவாலி அரிசி - 50 கிராம்

3. தயிர் - 1/4 கப்

4. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - தேவையான அளவு

செய்முறை :

1. முந்தைய நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். பிறகு குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும்.

2. தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும்.

3. பிறகு, கால் கப் தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்தால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய குதிரைவாலி கேப்பைக் கூழ் ரெடி!!

குதிரைவாலி கேப்பைக் கூழின் பயன்கள் :

1. இந்த கூழில் கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும்.

2. கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.

3. பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

by Swathi   on 09 Jan 2016  0 Comments
Tags: Kool   Koozh   Kelvaragu Koozh   Kuthiraivali Kool   குதிரைவாலி   கேப்பைக் கூழ்     
 தொடர்புடையவை-Related Articles
கம்பங் கூழ் கம்பங் கூழ்
குதிரைவாலி வெண்பொங்கல் குதிரைவாலி வெண்பொங்கல்
குதிரைவாலி கேப்பைக் கூழ் குதிரைவாலி கேப்பைக் கூழ்
உடலுக்கு உறுதி சேர்க்கும் குதிரைவாலி உடலுக்கு உறுதி சேர்க்கும் குதிரைவாலி
பிரண்டை குதிரைவாலி தோசை பிரண்டை குதிரைவாலி தோசை
குதிரைவாலி குழிப்பணியாரம் குதிரைவாலி குழிப்பணியாரம்
குதிரைவாலி பற்றி தெரியுமா !! குதிரைவாலி பற்றி தெரியுமா !!
சிறுதானியங்களும் அதன் சிறப்பு பயன்களும் !! சிறுதானியங்களும் அதன் சிறப்பு பயன்களும் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.