மெட்ராஸ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் கொம்பன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
குட்டிபுலி படத்தை இயக்கிய முத்தையா இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரிய படங்களின் ரிலீசால், படத்தின் வெளியாகும் தேதி ஏப்ரல் 2க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கொம்பன் படம் மார்ச் 27ம் தேதியே வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதே நாளில் சிம்புவின் ‘வாலு’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
|