LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கொள்ளிடம் ஆற்றின் கரைகள் மீண்டும் உடையும் அபாயம்!

கொள்ளிடம் ஆற்றின் கரைகள் மீண்டும் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியிலிருந்து காட்டூர் கிராமம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் உள்ள திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு ஆகிய இடங்கள் வலுவிழந்து பலமின்றி உள்ளன.

ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்தால் உடையும் அபாயம் உள்ளத. கடந்த மாதம் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால்  அளக்குடி கிராமத்தில் கரையில் கான்கிரீட் சுவரும் உடைந்து கரையும் உடைந்தது. அனைத்து துறை அதிகாரிகளும் கரைப்பகுதியில் முகாமிட்டு கரையை தற்காலிகமாக சரிசெய்தனர்.

மேலும் பல இடங்களில் ஆற்றின் வலது கரை பலம் இழந்தும் கரைந்தும் போயுள்ளது. பலவீனமான பகுதிகளிலும் மரக்குச்சிகள் அடிக்கப்பட்டு மணல் மூட்டைகள் போட்டு அடைக்கும் பணி நடந்தது. தற்காலிக பணி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. 

பருவமழை துவங்கும் தருவாயில் அதிக அளவு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கரையின் பலவீனமான இடங்கள் உடையும் வாய்ப்பு ஏற்படும். எனவே தற்காலிக பணிக்கு பதிலாக  நிரந்தரமாக கரையை உயர்த்தியும் அகலப்படுத்தியும் மேம்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரையோர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.