கத்தி படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் புலி. இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
தயாரிப்பில் இருந்த போதே புலி படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் பாகுபலி படத்தின் வெற்றி புலி படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்தது.
பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே படம் அக்டோபர் 1 ம் தேதி வெளியானது. விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் ஓரளவுக்கு பூர்த்தி செய்திருந்தாலும், சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே இந்த படம் பெற்றுள்ளது. அதோடு முதல் நாள் சிறப்புக்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஜய் படங்களுக்கு முதல் நாள் கிடைக்கும் வழக்கமான வசூல் புலி படத்துக்குக் கிடைக்கவில்லை. இதனால் முதல்வரா முடிவில் புலியின் வசூல் பற்றி பலரும் பல தொகையை சொல்லிக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேடி ஸ்டுடியோஸ் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, முதல்வாரத்தில் மட்டும் உலக அளவில் புலி திரைப்படம் 71 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது எஸ்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனம்.
|