LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஜப்பான்

விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் வெடித்துச் சிதறியது.

ஜப்பானில் தனியார் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட ராக்கெட் கவுன்டவுன் முடிந்து விண்ணுக்கு ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது.

 

ஜப்பான் சார்பில் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும்.

 

மேற்கு ஜப்பானின் வகாயாமா பகுதியின் குஷிமோடோ ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் நிறுவனத்தின் ராக்கெட் மார்ச் 13 ல் விண்ணில் ஏவப்பட்டது. பெரும் புகையுடன் விண்ணை நோக்கிக் கிளம்பிய ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது.

ஸ்பேஸ் ஒன் என்பது டோக்கியோவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமாகும். 2018-ல் உருவான இந்த நிறுவனம் சார்பில் விண்ணுக்குச் சொந்தமாக ராக்கெட் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

அதன்படி கைரோஸ் வகையைச் சேர்ந்த 60 அடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கினர். இதில் தனியார் செயற்கைக்கோளுடன் அரசு சார்பில் சிறிய செயற்கைக்கோளும் உடன் அனுப்பப்பட்டது.

 

ஸ்பேஸ் ஒன் நிறுவனத்துக்குச் சொந்தமான குஷிமோடோ ஏவுதளத்திலிருந்து கவுன்டவுன் முடிந்ததும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எனினும் விண்ணில் பறக்கத்தொடங்கிய சில நொடிகளில் ராக்கெட் வெடித்துச் சிதறியது.

 

முதல் கைரோஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எனினும் வெடித்துச் சிதறியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என ஸ்பேன் ஒன் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று, ஜப்பானில் கடந்த ஜுலை மாதம் ராக்கெட் எஞ்சின் சோதனையின்போது 50 விநாடிகளில் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.