LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஜப்பான் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை.

ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டிருந்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்குத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்கச் சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.

 

பயங்கர நிலநடுக்கம்: ஜனவரி 1 ஆம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. ஆனால் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின.

 

அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளை எழலாம் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக இஷிகாவா மாகாணத்தின் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இந்நிலையில், ஜப்பான் நேரப்படி செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் சுனாமி எச்சரிக்கையை அரசு திரும்பப்பெற்றது.

 

ஜப்பான் வானிலை ஆய்வு மையமானது இனி சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. என்றாலும் கூட கடல் மட்டத்தில் சில மாற்றங்கள் உள்ளன. அதனால் மக்கள் கடல் சார் பணிகளைச் சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

என்றாலும் கூட கடல் மட்டத்தில் சில மாற்றங்கள் உள்ளன. அதனால் மக்கள் கடல் சார் பணிகளைச் சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் நிகாடா, டோயோமா, புகுயி, கிஃபு மாகாணங்களில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதாக அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது.

 

 

இன்னும் ஒருவாரத்துக்கு உஷார்: நேற்று (திங்கள் கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 129 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவை 2 முதல் 6 ஷிண்டோ வரை (ஷிண்டோ என்பது ஜப்பான் நிலநடுக்க அளவுகோல். ரிக்டருக்கு பதிலாக ஷிண்டோ அளவுகோலில் அவர்கள் கணக்கிடுகின்றனர். ) இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் மீண்டும் 7 ஷிண்டோ அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.


 பிரதமர் உறுதி

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா செய்தியாளர்களைச் சந்திக்கையில், “இஷிகாவா மாகாணத்தில் அவசரப் பேரிடர் மேலாண்மைக் குழு முழு வீச்சில் செயல்பாட்டில் உள்ளது. அவர்கள் சேதங்களை ஆய்வு செய்வதோடு, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். நேரம் செல்லச் செல்லவே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் வீச்சு என்னவென்பது தெளிவாகப் புலப்படுகிறது. இப்போதைக்குப் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதே இலக்கு. காயமடைந்தவர்களைத் துரிதமாக மீட்டு உயிர்ச்சேதங்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

 

 

இந்தியத் தூதரகம் அறிவிப்பு

 

ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 50,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களது நலன் கருதி, டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 

ஜப்பானில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுகிறோம். உதவி தேவைப்படுவோர் இந்தியத் தூதரகத்தை அணுகலாம். இதற்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

 

 உதவிக்காக இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். sscons.tokyo@mea.gov.in மற்றும் offfseco.tokyo@mea.gov.in ஆகிய இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Kumar   on 04 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.