|
|||||
உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு |
|||||
உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது. தி இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என்று அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு பல இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கக்கூடும் என ரஷ்யா எச்சரித்து உள்ளது. சமீபகாலமாக இணைய தளங்களில் புகுந்து மர்ம நபர்கள், இணையதளங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பராமரிப்பின்போது, இணையதள முடக்கம் செய்வதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வேலைகளில் ஐ.சி.ஏ.என்.என். ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன், குறிப்பிட்ட இணையதள பக்கங்களை பார்க்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டு உள்ளது. ஐ.எஸ்.பி. எனப்படும் இணைய இணைப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இத்தகைய இடையூறுகளை தவிர்க்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|