LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பிரேசில் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

பிரேசில் ஜனாதிபதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் பதவியேற்ற ஜாய்ர் போல்சோனாரா, சில மாதங்களிலேயே விசா வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். அதன்படி அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலதிபர்கள் விசா இன்றி இனி பிரேசில் வரலாம் என அந்நாட்டு அதிபர் 'போல்சோனாரா' அதிரடியாக தெரிவித்துள்ளார். 

 

பல்வேறு நாடுகளுக்கு விசா சலுகை அளிப்பதன் மூலம் பிரேசில் அரசு தங்களதுச் சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 'ஆறு மில்லியன்' வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பிரேசிலுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு திட்டமிடும் போது ஏற்படும் முக்கிய கேள்வி விசா. ஆனால் விசா இல்லாமலேயே பயணம் செய்யக்கூடிய நாடுகளும் உள்ளன. தங்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்காக சில நாடுகள் இதுபோன்ற சேவையை வழங்கி வருகின்றன. விசா இல்லாமல் சுமார் 58 நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்யலாம். பூட்டான், ஹாங்காங், அண்டார்டிகா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு விசா எடுப்பதில் சலுகை உள்ளது.

 

கம்போடியா தமிழக மாமன்னர்களால் கட்டப்பட்ட 'அங்கோர் வாட்' கோவில் கம்போடியாவில் புகழ்பெற்றது. இந்தியர்கள் அங்கு அதிகபட்சமாக 30 நாட்கள் விசா இன்றித் தங்கிக் கொள்ளலாம். இந்தோனேசியா தெற்காசியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா மற்றும் உலகின் பெரிய பல்லி இனமான 'கொமொடோ' விளங்கும் உள்ளது. இங்கு 30 நாட்களுக்கு விசா தேவையில்லை. ஜார்டன் பெட்ரா மற்றும் அம்மன் சிட்டாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இரண்டு வாரங்களுக்கு விசா எடுத்துக்கொள்ளலாம். மாலத்தீவுகள் இந்தியர்கள் இங்கு செல்ல அதிகபட்சமாக 90 நாட்கள் வரை விசா இலவசமாகப் பெற்றுத் தங்கிக்கொள்ளலாம். மொரீசியஸ் உலகின் மிக அற்புத தீவுகளில் ஒன்றான மொரீசியஸில் இந்தியர்கள் அதிகபட்சமாக 60 நாட்கள் வரை விசா இன்றி தங்கிக் கொள்ளலாம். நேபாளம் நேபாளத்தில் இந்தியர்கள் அதிகபட்சமாக 150 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கிக் கொள்ளலாம். சீசெல்ஸ் தீவு மற்றும் தாய்லாந்து நாட்டில் இந்தியர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கிக் கொள்ளலாம்.

by Madurai karthika   on 25 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.