LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

2023ல் கார்ப்பரேட் உலகை அதிரவைத்த 5 இந்திய சிஇஓக்கள்..

2023 ஆம் ஆண்டு உண்மையிலேயே இந்திய வம்சாவளி சிஇஓ-க்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அவர்களது சிறப்பான செயல்பாடுகள், சாதுர்யமான முடிவுகள், தாக்கத்தைத் தரக்கூடிய நடவடிக்கைகள் எல்லாம் பல தலைப்புச் செய்திகளை உருவாக்கி கார்ப்பரேட் உலகில் குறிப்பிடத்தக்கத் திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

2023 ஆம் ஆண்டில் இந்த சிஇஓக்கள் செய்த சாதனையானது மாறிவரும் சூழலுக்கேற்ப முடிவெடுப்பது மற்றும் புதுமைகளை உருவாக்குவதுமான கலவையாக அவரவர் நிறுவனங்களில் திகழ்கின்றன.

 

ஆல்ஃபாபெட்- சுந்தர் பிச்சை

 

ஆல்ஃபாபெட் மற்றும் கூகுளின் சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சைக்கு 2023 ஆம் ஆண்டு பெரும் சவாலாகவே இருந்தது. குறிப்பாக Fortnite developer நிறுவனத்தின் Epic Games விஷயத்தைச் சொல்லலாம்.

 

பணிநீக்கம் பற்றி தனது கவலையைத் தெரிவித்த சுந்தர் பிச்சை கூகுளின் நடவடிக்கைகளை போட்டியை அடக்கும் எண்ணத்தில் இல்லை என்பதை உறுதிசெய்தார். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சந்திக்கும் சவால்களை நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அதன் தலைவருக்கு இருக்க வேண்டுமென்பதை வெளிப்படையான தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் நிரூபித்தார் பிச்சை.

 

மைக்ரோசாப்ட்- சத்யா நாதெல்லா

 

மைக்ரோசாப்ட் நிறுவனம் உச்சாணிக் கொம்பை எட்டிய 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட நெருக்கடிகளின் போதெல்லாம் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாக சத்யா நாதெல்லா கையாண்டார். OpenAl நிறுவனத்திலிருந்து Sam Altman திடுதிப்பென்று வேலையிலிருந்து நீக்கப்பட்டபோது அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டார். இது அவரது உடனடியான உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனை வெளிக்காட்டியது.

அடுத்தடுத்து எழுந்த பல பிரச்சினைகளைச் சுமுகமாகக் கையாண்டு தனது நிறுவனத்தின் எல்லைகளை விரிவுபடுத்தினார். ஓபன்ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டு செய்தது அந்த மாபெரும் நிறுவனம் ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சிக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியது.

 

 

அடோபி - சாந்தனு நாராயண்

 

தெளிவற்ற ஒழுங்குமுறைகளால் உழன்ற Figma நிறுவனத்துடன் 20 நூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஓர் ஒப்பந்தம் செய்ததன் மூலம் தலைப்புச் செய்தியானார் சாந்தனு நாராயண். அத்துடன் மரபுசார்ந்த விதிகளிலிருந்து விலகி வேலை-வாழ்க்கை உறவை சமநிலைகள் செய்து குறிப்பிட்ட நேர காலத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்பதில் தனிநபரின் சுதந்திரத்தை உறுதி செய்வதில் அவருக்குள்ள தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினார்.

 

இந்த அவரது அணுகுமுறை ஊழியர்களின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் உள்ள நெளிவு சுளிகளை அவர் புரிந்து வைத்திருப்பதை எதிரொலித்தது.

 

ஐபிஎம்- அரவிந்த் கிருஷ்ணா

 

ஐஐடி கான்பூர் மாணவரான அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம்மின் சிஇஓவாக பொறுப்பேற்றும் முக்கிய இடத்தைப் பிடித்தார். ரிட்டர்ன்-டூ-அலுவலக பிரச்னையில், வொர்க் ஃபிரம் ஹோம் போன்ற ரிமோட் மேலை முறைகளினால் ஊழியர்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் நிலையை மறைமுகமாக உணர்த்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் நேரடியாகப் பணியாற்ற வேண்டும் என்ற கொள்கையை தெளிவுபடுத்திய விதம் அவரது பாராட்டத்தக்கச் செயல்களில் ஒன்றாகும். இந்த அணுகுமுறை நிறுவனத்தின் இலக்குகளுக்கும் நெளிவுத்தன்மைக்கும் உள்ள சமநிலையைச் சுட்டிக்காட்டியது.

 

பெட்டர்.காம்- விஷால் கார்க்

 

பெட்டர்.காம் நிறுவன சிஇஓ ஆன பின்னர் தொழிலாளர்களைப் பாதிக்கும் முடிவுகள் பற்றி கவனம் செலுத்தினார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 4000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் விஷால் கார்க் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவும், விமர்சனங்களும் கிளம்பியது. அவரது தலைமையில் தனது சிறப்பான அனுபவத்தால் கற்றல் மற்றும் பின்பற்றுதல் பற்றிய ஈடுபாட்டைக் காட்டி கார்ப்பரேட் எல்லையை விரிவுபடுத்தினார்.

by Kumar   on 31 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.