LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மளிகைக் கடைக்காரரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு!

மளிகைக் கடைகாரர் காமராஜின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.

திண்டுக்கல்ஆத்துார் சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது 43). இவர் மளிகைப் பொருட்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய்ரோட்டில் பின்னால் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம்,  காமராஜ் மீது மோதியது. 

தடுமாறிக் கீழே விழுந்ததில் காமராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த அவரது இருதயம், சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இயங்கின.
மனைவி இந்திராவிடம் உறுப்பு மாற்று தானம் குறித்து மருத்துவ குழுவினர் கூறினர். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு அதனைப்  பொருத்தி மறு வாழ்வு தரலாம்  என்ற மருத்துவக் குழுவினரின் யோசனையை அவர் ஏற்றார். 

5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வேறு வேறு நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள மலர் மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது குறிப்பிடத் தக்கது.

by Mani Bharathi   on 08 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.