LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் முதன் முறையாக வினோதம்- விசேஷ நிகழ்ச்சியில் உறவினர்களை வரவேற்ற 'ரோபோ'

மருத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படுவது வாடிக்கை. ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்க ரோபோ பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது.

 

ஆம்... புதுச்சேரியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்தினர்களை ரோபோ ஒன்று ரோசாப்பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்றது பிரமிக்க வைத்தது. புதுச்சேரியில் 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் வருகை தந்த விருந்தினர்களை ரோபோ ஒன்று வரவேற்றது.

 

பெண் போன்று பாவாடை, தாவணி மற்றும் தலையில் தொப்பியுடன் மிடுக்காகக் காணப்பட்டது. தட்டில் கொடுக்கப்பட்ட ரோஜா பூ, சாக்லெட் ஆகியவற்றை விருந்தினர்களைத் தேடிச்சென்று வழங்கியது. மேலும் மக்கள் விரும்பும் பாடல்களை அது இசைக்கச் செய்தது. குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.

 

சூறாவளி போல் சுற்றிச் சுற்றி வலம் வந்த ரோபோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். மும்பை மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த ரோபோவை 3 மாதத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளனர். இதனை முதல் முறையாகப் புதுச்சேரியில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

by Kumar   on 09 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.