LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்நாட்டில் 5, 8- ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பற்றி அமைச்சரவை முடிவு செய்யும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

தமிழ்நாட்டில் 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்துதேர்வு முறை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் காமராஜர் திறந்து வைத்த அலங்கார நுழைவு வாயில் வாகனம் மோதி சேதம் அடைந்ததையடுத்து ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலங்கார நுழைவு வாயில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 

இதற்கிடையில், 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்திருப்பது சீர்திருத்தம் அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது என்று அவர் வலியுறுத்தி உள்ளார். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வியின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனடாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

by Mani Bharathi   on 09 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.