LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில்

சென்னையில் 1951 அக்டோபர் 9ம் தேதி பிறந்தார் சுல்தான் அகமது இஸ்மாயில்.
***********************************
சென்னை, புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் பயோடெக்னாலஜி துறைத் தலைவர். 'மண்புழு விஞ்ஞானி’ என்பதுதான் அவரது நிரந்தர அடையாளம். இப்போது உலக அளவில் மண்புழு உரம் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. ஆனால், இது தொடர்பாகக் கடந்த 20 வருடங்களாக ஆய்வுசெய்து அப்போதே மண்புழு உரத்தை உருவாக்கியவர்!
******************************************
மண்புழு உரத் தொழில்நுட்பத்தைக் குறிக்க 'வெர்மி டெக்’ என்ற வார்த்தையை உருவாக்கிய இவர், உலகம் முழுக்கப் பயணித்து மண்புழு உரத்தின் பெருமைகளை உரக்கப் பேசிவருகிறார். இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுபவர், பள்ளிக் குழந்தைகளுக்கு 100 விதமான அறிவியல் செய்முறைகளை இலவசமாகப் பயிற்றுவிக்கிறார். அந்த அடிப்படை செய்முறை அறிவியலை தென் மாநிலப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் பொறுப்பை மத்திய அரசு இவரிடமும் ஒப்படைத்துள்ளது. கழிவுநீரை எளிய முறையில் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களைச் செழிக்கச் செய்திருக்கிறார் இஸ்மாயில்!
***********************************
மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களை மரியாதைக்குறியதாகவும் விவசாயிகளின் நண்பனாகவும் பாவித்த அவர் , "நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை" என கூறியிருக்கிறார்.
************************************
மண்புழு தொழில் நுட்பம்
**************************************
இஸ்மாயில், குழந்தைகளுக்கான ஒரு நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைக்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து, மண்புழு உரம் தயாரித்தலுக்கான கட்டகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் இவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்காக சென்னையிலுள்ள 50 பள்ளிகளில் மண்புழு உரம் தயாரித்தல் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இது மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு , திடக் கழிவு மேலாண்மை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் சார்ந்த பல விரிவுரைகளை வழங்கியுள்ளார். தற்போது இவர் பினாங்கின் நுகர்வோர் சங்கத்துடன் (CAP) இணைந்து மலேஷியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் கரிம வேளாண்மை செய்யும் விவசாயிகள் இடையே கரிம வேளாண்மை , உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் கழிவு மேலாண்மை போன்றவை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் முயற்சியில் , ஈடுபட்டு வருகிறார்.
***************************************
மண்புழுவின் எதிர்ப்பு அழற்சி பண்புகள், பீனியல் சீட்டேவின் கட்டமைப்பு மற்றும் மின் உயிர் ஒளிர்வுத் தன்மை ஆகியவைகளிலும் இவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அறிஞர் அண்ணா விருது பெற்றுள்ளார்.
*************************************
பல்வேறு நாடுகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மண்புழுவின் அவசியத்தை குறித்தும் மண்புழு உரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சுல்தான் அகமது இஸ்மாயில்.
                                  
by Kumar   on 13 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.