LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வரலாறு - Tamizh History Print Friendly and PDF

செய்யாறு அருகே 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுண்டிவாக்கம் கிராமத்தில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் காலத்துக் கல்வெட்டு எனத் தெரிய வந்துள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோயில் முன்பு ஒரு பழமையான கல்வெட்டு உள்ளது.

 

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை படிக்கப்படாத கல்வெட்டுகளைப் படித்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தக் குழுவைச் சேர்ந்த பாலமுருகன் வழிகாட்டுதலின் பேரில், லோகேஷ் என்பவரால் சுண்டிவாக்கத்தில் உள்ள கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. 

 

சுண்டிவாக்கம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டை முனைவர் பா. வெங்கடேசன் படித்து, கல்வெட்டில் உள்ள விவரங்களை வெளிப்படுத்தினார். இந்தக் கல்வெட்டு 14-ம் நூற்றாண்டில் செய்யாறு மற்றும் தொண்டை மண்டலம் வட ஆற்காடு பகுதியை ஆட்சி செய்த சம்புவராயர் மன்னர் ராஜ நாராயணன் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.

 

கி.பி 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதி

 

இந்த கல்வெட்டில், “ஸ்வஸ்தஸ்ரீ ஸகலலோக சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயணன் சம்பூராயர்க்கு யாண்டு பதின் ஏழாவது தை மாதம் அத்திப் பற்று தாழ(ம்) செண்டு பாக்கமவன் ஓட மாராயசத்து மெய்(யூர்) மடத்திலும் எல்லா வரிகளும் நீக்க ஸர்வ மான்ய இறையிலியாக குடுத்தோம்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.

 

டாக்டர் கோ. திருமாவளவன் தனது ‘சம்புவரையர்’ என்ற நூலில், “கி.பி 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி. 13-ம் நூற்றாண்டின் இறுதி வரை சோழப் பேரரசின், படைத் தலைவர்களையும் அதையடுத்து, பாண்டியப் பேரரசு, விஜயநகரப் பேரரசு ஆட்சியில் தொடர்ந்து, தொண்டை மண்டலப் பகுதியின் ஆட்சித் தலைவர்களாகவும் சம்புவராயர்கள், தம் மேலாண்மை அரசர் சார்பிலும், வழங்கிய கல்வெட்டுகள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. 

 

இந்த சம்புவராயர் மன்னர்களின் தலைநகராக விரிஞ்சிபுரமும் பின்னர் காஞ்சிபுரம் இருந்தது. ஆரணி அருகே உள்ள படவேடு சம்பூவராயர்களின் கோட்டை நகரமாக விளங்கியது. ” என்று குறிப்பிடுகிறார்.

 

ராஜ நாராயணன் சம்புவராயரின்

 

மேலும், சம்புவராயர் சிறந்த மன்னர்களில், ராஜ நாராயணனும் ஒருவன் என்று குறிப்பிடுகிறார். மேலும், ராஜ நாராயணன் சம்புவராயர் தன்னை ஸ்வஸ்திக், சகலலோக சக்ரவர்த்தி, திரிபுவன சக்ரவர்த்தி என்று கல்வெட்டுகளில் அழைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

 

இதன் மூலம், செய்யாறு அருகே சுண்டிவாக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, ராஜ நாராயணன் சம்புவராயரால் பொறிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த கல்வெட்டில், பதின் ஏழாவது தை மாதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ராஜ நாராயணன் சம்புவராயரின் 17-வது ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இதன் மூலம், ராஜ நாராயணன் சம்புவராயர் கி.பி 1338-ல் ஆட்சி பொறுப்பேற்றார் என்ற கணக்கின்படி, ராஜ நாராயணன் 17-வது ஆட்சி என்றால், இந்த கல்வெட்டு கி.பி 1356-ம் ஆண்டு பொறிக்கப்பட்டது தெளிவாகிறது.

 

இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட, சுண்டிவாக்கம் கிராமம் இந்தக் கல்வெட்டில் செண்டுபாக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செண்டுபாக்கம் என்பதே காலப்போக்கில் சுண்டிவாக்கம் என மாறியிருக்கலாம் என்பது கருத முடிகிறது. மேலும், இந்தக் கல்வெட்டு, இந்த ஊர் சர்வ மான்ய இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

by Kumar   on 14 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்த என ஆய்வில் தகவல். தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்த என ஆய்வில் தகவல்.
4500 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் ஜல்லிக்கட்டு - தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பாறை ஓவியங்கள்! 4500 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் ஜல்லிக்கட்டு - தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பாறை ஓவியங்கள்!
குமரியில் கிடைத்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலக் கல்வெட்டு! குமரியில் கிடைத்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலக் கல்வெட்டு!
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் -   தமிழ்-கொரிய தொடர்பு - 2 -  ஒரிசா பாலு ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் - தமிழ்-கொரிய தொடர்பு - 2 - ஒரிசா பாலு
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 1  -ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 1 -ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன்
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்- புதிய தொடர் ஆரம்பம் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்- புதிய தொடர் ஆரம்பம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.