LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வரலாறு - Tamizh History Print Friendly and PDF

தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்த என ஆய்வில் தகவல்.

தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் முன்பு தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் முன் தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சமஸ்கிருதம் போலச் சிதைந்து அழியாமல் தமிழ் மொழி தொடர்ந்து செழுமையோடு பயன்பாட்டில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள 'மேக்ஸ் பிளான்க்' அறிவியல் மானுடவியல் வரலாற்றுக் கல்வி நிறுவனமும், உத்தரகண்ட்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்தியவனஉயிர்க்

கல்வி நிறுவனமும்

இணைந்து மொழி சார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டன.

 

இந்தியாவின் ஆதி இனமாகக் கருதப்படும் திராவிடர்களின்மொ ழியியல் குறித்த ஆய்வை

அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்

மேற்கொண்டனர். தமிழிலிருந்து

தோன்றிய பிற மொழிகள் குறித்தும்,

அவற்றிலிருந்து பிரிந்து புதிதாக

உருவான கிளை மொழிகள் குறித்தும் அவர்கள் பல்வேறு தரவுகளைச்

சேகரித்தனர். அதன் அடிப்படையில்

சில விஷயங்களைக் கண்டறிந்து அதனை

ஆய்வறிக்கையாகச்

சமர்ப்பித்துள்ளனர்.

 

பழமையான மொழி தமிழ்தான்.

 

அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

கிழக்கே வங்கதேசத்திலிருந்து மேற்கே ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் தெற்காசியப் பகுதியானது குறைந்தது 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. திராவிடம், இந்தோ- ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக்குடும்பங்களின்கீழ் அந்த மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானதும், பழமையானதுமான திராவிட மொழிக் குடும்பம், சுமார் 80 மொழிகளை உள்ளடக்கியது. ஏறத்தாழ 22 கோடி மக்கள் அம்மொழிகளைத் தற்போது பேசுகின்றனர்.

 

தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவில்தான் அவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

திராவிட மொழிக் குடும்பத்தில் பழமையான மொழி தமிழ்தான். அதைத் தவிரக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் பரவலாக உள்ளன. அம்மொழிகளின் இலக்கியங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்குத் தோன்றியவை. முன்பே

 

உலகின் மூத்த மொழிகளில் தமிழைப் போலவே சமஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சமஸ்கிருதத்தைப் போலச் சிதைந்து போகாமல் அதன் காப்பியங்களும், கல்வெட்டுகளும் முற்காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்ந்து காணக் கிடைக்கின்றன.

 

பூகோள அடிப்படையில் மொழிகளின் தோற்றம் திராவிட எங்கு என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை; அதேபோன்று, எந்தக் காலத்தில் அவை தோன்றின என்பதை அறுதியிட்டுக் கூறவும் இயலாது. அதேவேளையில், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சில சான்றுகளின்படி ஆய்வு செய்ததில், ஆரியர்கள் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என்பது தெரிகிறது. இந்த விஷயத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்தொற்றுமையும் உள்ளது.

 

மேலும் சில தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது தமிழை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு. விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு.
4500 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் ஜல்லிக்கட்டு - தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பாறை ஓவியங்கள்! 4500 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் ஜல்லிக்கட்டு - தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பாறை ஓவியங்கள்!
செய்யாறு அருகே 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு செய்யாறு அருகே 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
குமரியில் கிடைத்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலக் கல்வெட்டு! குமரியில் கிடைத்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலக் கல்வெட்டு!
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் -   தமிழ்-கொரிய தொடர்பு - 2 -  ஒரிசா பாலு ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் - தமிழ்-கொரிய தொடர்பு - 2 - ஒரிசா பாலு
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 1  -ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 1 -ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன்
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்- புதிய தொடர் ஆரம்பம் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்- புதிய தொடர் ஆரம்பம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.