|
|||||
தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ? |
|||||
ஆடுகளம் படத்தை தொடர்ந்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் அடுத்த படம் சூதாடி. விரைவில் இந்த படத்தின் படபிடிப்புகள் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதில் நடிக்க தனுஷ் தனது கெட்டப்பை மாற்ற வேண்டியுள்ளது. தற்போது தனுஷ், கே.வி.ஆனந்த் இயக்கும் 'அனேகன்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் 'ஷமிதாப்' படத்தில் அக்ஷரா ஹாசனுடன் நடித்து வருகிறார். அடுத்து பாலாஜி மோகன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். வெற்றிமாறன் படத்துக்கு கெட்டப் மாற்றினால் இந்தப் படங்கள் பாதிக்கும் என்பதால் சில மாதங்கள் காத்திருக்கும்படி வெற்றிமாறனிடம் கூறினாராம் தனுஷ். சினிமா உலகையும் தாண்டிய நட்பு இருவருக்கும் இடையே இருப்பதால் நண்பன் தனுஷ் சொன்னதும் ஓகே சொல்லிவிட்டார் வெற்றிமாறன். அனேகமாக 'சூதாடி' படத்தின் படபிடிப்பு ஜனவரியில்தான் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by Swathi on 11 Oct 2014 0 Comments | |||||
Tags: சூதாடி தனுஸ் தனுஷ் வெற்றிமாறன் அனேகன் ஷமிதாப் Soothadi | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|