|
|||||
சுற்றுச்சூழலில் இந்தியா உலக நாடுகளின் வரிசையில் 155வது இடம் !! மிக மோசமான நகரம் டெல்லி !! |
|||||
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக நாடுகளின் வரிசையில், இந்தியா, 155வது இடத்தில் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சுற்றுபுற சுழல், காற்றின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் இந்தியா, சீன, சிங்கப்பூர் உட்பட 178 நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு முடிவில், இந்தியா, 155வது இடத்தையும், சீனா, 118வது இடத்தையும், பிரேசில், 77வது இடத்தையும், ரஷ்யா, 73வது இடத்தையும், தென் ஆப்ரிக்கா, 72வது இடத்தையும் பிடித்தன. உலக தரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், அசுத்தமான வாயுக்கள் கலந்து, காற்றின் தரம் மிகக் குறைவாகக் காணப்படுகிறது. தனி மனித சுகாதார பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது;
உலக நாடுகளில் சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளுடன், இந்தியாவும் வளர்ந்து வரும் சந்தையைக் கொண்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் விஷயத்தில், மற்ற வளரும் நாடுகளின் பின்னால் இந்தியா உள்ளது வருந்த தக்க விசயமாகும்.
சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் சுத்தமான நாடுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், சுற்றுச் சூழலில் மிகவும் மோசமான நகரமாக டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி வாகனங்கள் அதிகரிப்பால் காற்று மாசுப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங் இதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 123வது இடத்தை பிடித்த இந்தியா இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 155 வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 29 Jan 2014 0 Comments | |||||
Tags: சுற்றுச் சூழல் இந்தியா உலகின் மிக மோசமான நகரம் டெல்லி டெல்லி நகரம் 155 வது இடம் Delhi | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|