|
||||||||
சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் வட மாநிலங்கள்தான் டாப் !! |
||||||||
சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் டெல்லி மற்றும் பீகார் மாநிலம் முன்னிலை வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்பிரிங் மைண்ட்ஸ் என்ற நிறுவனம், இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களி்ல் உள்ள 520 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பொறியியல் மாணவர்களிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,
பொறியியல் மாணவர்களுக்குடில்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் மேற்கு இந்திய பகுதியை சேர்ந்த கல்லூரிகள் மட்டுமே அதிக வேலைவாய்ப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளை கொண்ட மாநிலங்களாக திகழும் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள் குறைந்த வேலைவாய்ப்பை மட்டுமே வழங்கி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளான்களை போன்று நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதிகளவு இன்ஜினியர்கள் உருவாகும் நேரத்தில் குறைந்த அளவே வேலை திறன் மி்க்க இன்ஜினியர்கள் உருவாகின்றனர். என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
||||||||
by Swathi on 31 Jan 2014 0 Comments | ||||||||
Tags: North India States IT Engineers Top IT Engineers சிறந்த பொறியாளர்கள் வட இந்தியா பொறியாளர்கள் டெல்லி | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|