இந்த வாரத்தில் மட்டும், 1 பந்து 4 ரன் 1 விக்கெட், ர , 13 பம் பக்கம் பார்க்க என 3 திகில் படங்கள் தமிழக திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது.
இந்த ஆண்டில் இது வரை 30 சதவிகித படங்கள் திகில் படங்களாக வெளிவந்துள்ளன. அதில், யாமிருக்க பயமே, அரண்மனை போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
நாளை வெளியாகும் படங்களில் எந்த பேய்க்கு மக்கள் பயப்பட போகிறார்கள். எந்த படம் மக்களுக்கு பயந்து தியேட்டரை விட்டு ஓடப்போகிறது என்பது வரும் திங்கட்கிழமை தெரிந்து விடும்.
இந்த படங்கள் தவிர பகடை பகடை, அழகிய பாண்டிபுரம், நாங்கெல்லாம் ஏடாகூடம், மனம் கொண்ட காதல், அப்பா வேணாம்ப்பா போன்ற சிறுபட்ஜெட் படங்கள் ரிலீசாகிறது. கன்னடத்தில் வெளியான அர்ஜுன் நடித்த பிரசாத் படமும், எக்சோடஸ் என்ற ஹாலிவுட் படம் டப் செய்யப்பட்டு நாளை வெளியாகிறது.
தமிழகத்தில் மொத்தம் நாளை 11 படங்கள் ரிலீசாகிறது.
|