இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம் டார்லிங். இந்த படத்தை சாம் ஆண்டன் என்பவர் இயக்கி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷுடன் இந்த படத்தில் நிக்கி கில்ராணி, பால சரவணன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம், இது வரை திரையிடப்பட்ட திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியான புதிதில் 'ஐ', 'ஆம்பள' இரண்டு படங்களுக்கும் அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்ததால், குறைவான திரையரங்குகளில் 'டார்லிங்' திரைப்படம் வெளியானது.
தற்போது படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேல் டிவி விளம்பரங்களில் பேய் ஐயம் கம்மிங் ஃபார் யூ எனக் கூற அதற்கு ராஜேந்திரன் ஐயம் வெயிட்டிங் என துப்பாக்கி பட டயலாக் உட்பட காமெடி விளம்பரங்கள் என பட்டைய கிளப்பியது. இதனாலும் படத்திற்கு இன்னும் மவுசு ஏறியிருக்கிறது.
படம் வெளியான 2-ம் நாளில் 25 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால் டார்லிங் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.
|