|
|||||
தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு - சட்டசபையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உரை! |
|||||
தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரை நிகழ்த்தினார். 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடும் அடங்கும். பட்டியலில் தமிழுக்காக இடம்பெற்ற அம்சங்கள் பின்வருமாறு: தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது. யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டு வர முயற்சி எடுத்துள்ளோம் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டு உள்ளது. பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது தமிழ் மொழி வளர்ச்சிக்காக, தமிழுக்கு முக்கியத்துவம் தந்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியமைக்காக வலைத்தமிழ் பெரிதும் மகிழ்கின்றது. |
|||||
by Mani Bharathi on 08 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|