அமெரிக்கா ராணுவ ரகசியங்களை, விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அளித்த, முன்னாள் ராணுவ அதிகாரிக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணைய தளம் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணைய தள உரிமையாளர் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய அமெரிக்கா மறைமுக முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் ராணுவ அதிகாரி பிராட்லி மேன்னிங் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராணுவ அதிகாரி பிராட்லி மேன்னிங் மீது அமெரிக்க அரசு உளவு பார்த்தல், திருட்டு, கம்ப்யூட்டர் மோசடி உள்ளிட்ட 20 வழக்குகளை அவர் மீது சுமத்தியது. இதில் 19 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார். சுமார் 16 மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில், பிராட்லி மேன்னிங்க்கு அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
|