உலகின் அதிக பாராட்டுக்களைப் பெற்ற பிரபலமானவர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலின் டாப் டென் பட்டியலிலும், முதல் 30 பேர் பட்டியலிலும் 7 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் 5வது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும், 7வது இடத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், 9வது இடத்தில் அமிதாப் பச்சனும், 10வது இடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும், 14வது இடத்தில் அன்னா ஹசாரேவும், 18வது இடத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், 30வது இடத்தில் ரத்தன் டாடாவும் இடம்பெற்றுள்ளனர். இதற்கான ஆய்வை யூகோவ் நிறுவனம் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 14,000 பேரிடம் மேற்கொண்டது.
|