|
||||||||
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சின்னத்திரையில் என்ன ஸ்பெஷல் !! |
||||||||
இந்த வருட ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஸ்பெஷலாக அஞ்சான், சைவம், முண்டாசுப்பட்டி போன்ற புதிய திரைப்படங்கள்... சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது. சன் டிவி : சன் டிவியில் ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக சசி குமார், லாவண்யா, சூரி, சந்தானம் நடித்த பிரமன் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த சுதந்திர தினத்தன்று வெளியான அஞ்சான் திரைப்படம் சன் டிவியில் விஜயதசமி அன்று ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவி : ஆயுதபூஜை தினமான அக்டோபர் 2ஆம் தேதி சைவம், முண்டாசுப்பட்டி திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமியன்று நெடுஞ்சாலை திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் : ஆயுத பூஜை : ஸ்கைபால் சர்வதேச அளவில் வசூல் சாதனை நிகழ்த்திய அதிரடி ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் ஸ்கைபால் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தனுஷின் அறிமுக பாலிவுட் படம், 100 கோடி வசூல் என எண்ணற்ற பெருமைகளை கொண்டுள்ள அம்பிகாபதி திரைப்படம் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. விமல், பிந்து மாதவி, சூரி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படம் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. விஜயதசமி : விமல், சிவகார்த்திகேயன் கூட்டணியில் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வரவேற்பு பெற்ற கேடி பில்லா கில்லாடி ரங்கா நகைச்சுவை திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
கோயம்பேட்டு சந்தையில் வேலைசெய்யும் சிறுவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்து, இந்தாண்டின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படம் எனும் பெருமையைப் பெற்ற கோலிகோடா மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஜெய், ஸ்வாதி நடிப்பில், காமெடி த்ரில்லலாக அண்மையில் வெளியாகி அனைவரது பாராட்டைப் பெற்ற வடகறி திரைப்படம், தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக , உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கலைஞர் டிவி : கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுதபூஜையன்று சிறப்புத் திரைப்படமாக சரபம் திகில் படம் ஒளிபரப்பாக உள்ளது. |
||||||||
by Swathi on 30 Sep 2014 0 Comments | ||||||||
Tags: Ayudha Pooja Vijaya Dashami Special Programs Tamil TV Channels TV Channels Special Programs விஜய தசமி ஆயுத பூஜை | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|