LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

2010-2019 செம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு

2010-2019 செம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு

செம்மொழி தமிழ் விருது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் விருதாகும்.2004-ஆம் ஆண்டு தமிழ்மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. செம்மை நிறை மொழியான தமிழுக்கென்று தனித்த ஒரு நிறுவனமாக 2008-ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைந்தது.

கலைஞர் மு. கருணாநிதி சொந்த நிதியாக ரூபாய் 1 கோடி வழங்கி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையை இந்நிறுவனத்தில் அமைத்தார். இதன் மூலமாக கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ 10 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ், கருணாநிதியின் உருவச்சிலையுடன் வழங்கப்படுகிறது.

செம்மொழி தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பினை அளிப்பவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.2009 ஆம் ஆண்டு முதல் விருது, பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பாப்போலாவுக்கு  வழங்கப்பட்டது.2010-2019 வரையிலான விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. தற்போது பதவியேற்றுள்ள அரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி 2010-2019 வரையிலான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.2010-முனைவர் V.S.இராஜம்(Former Senior Lecturer, Department South Asia Regional Studies,University of Pennsylvania)
2.2011-பேராசிரியர் பொன் கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
3.2012-பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (முன்னாள் துணைவேந்தர்,தமிழ்ப் பல்கலைக்கழகம்)
4.2013-பேராசிரியர் ப. மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)
5.2014-பேராசிரியர் கு. மோகனராசு முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் திருக்குறள் ஆய்வு மையம்,சென்னைப் பல்கலைக்கழகம்)
6.2015-பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி)
7.2016-பேராசிரியர் கா.ராஜன் (முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்)
8.2017-பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (Professor and head of the institute of indology and Tamil studies, cologne University, Germany)
9.2018-கவிஞர் ஈரோடு தமிழன்பன் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி,சென்னை)
10.2019-பேராசிரியர்கு.சிவமணி (முன்னாள் முதல்வர், கரந்தை புலவர் கல்லூரி, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)

by R.Gnanajothi   on 02 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.