சிங்கம், சிங்கம் 2 என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்த ஹரி - சூர்யா கூட்டணி, அடுத்ததாக சிங்கம் 3 ல் மீண்டும் இணைய உள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் மற்றும் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்த அனுஷ்காவே இந்த படத்திலும் நடிப்பார் எனத் தெரிகிறது. இரண்டாவது ஹீரோயின் பற்றி இன்னும் முடிவாகவில்லையாம். மேலும் முதல் இரண்டு பாகத்திலும் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது மாஸ், ஹைக்கூ, 24 என பல படங்களில் பிசியாக நடித்து வரும் சூர்யா இப்படங்களுக்கு பிறகு சிங்கம் 3 படத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது.
|