|
|||||
குக்கூ பாதிப்பில் இருந்து மீளாத தினேஷ் !! |
|||||
அட்டகத்தி படத்தை தொடர்ந்து நடிகர் தினேஷ் குக்கூ என்ற படத்தில் நடித்தார். கண் தெரியாத காதலர்களின் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், பார்வையற்ற காதலனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார் தினேஷ். குக்கூ படத்திற்காக கண்களை ஒரே நிலையில் வைத்தபடி நிறைய நாட்கள் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் தினேஷ். அப்படத்தில் நடித்து வந்தபோது கண் வலியாலும் அவதிப்பட்டிருக்கிறார். ஒருவழியாக படம் பெரிய ஹிட்டானது. அதனால் அதுவரை பட்ட கஷ்டமெல்லாம் சந்தோசமாக மாறி விட்டது என்று உற்சாகமாக சொன்னார் தினேஷ். குக்கூ படத்தை தொடர்ந்து தினேஷ், திருடன் போலீஸ் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த படத்தில் நடித்தபோது குக்கூ படத்துக்காக கண்களை மூடிக்கொண்டு செய்த சில விசயங்கள் தினேஷிடம் மீண்டும் வெளிப்பட, அப்படத்தில் அவர் நடித்த போலீஸ் கேரக்டரின் கம்பீரத்தை அது குறைத்து விட்டதாம். குறிப்பாக, இயக்குனர் ஆக்சன் சொன்னதும் கண்களை மூடிக்கொள்வது, ஆவேசமாக பேசக்கூடிய காட்சிகளில் பார்வை அங்குமிங்கும் அலைய விடுவது போன்ற வெளிப்பாடுகள், காட்சியின் வேகத்தை குறைத்திருக்கிறது. அதன்காரணமாக திருடன் போலீஸ் படத்தில் நடித்தபோது ஒவ்வொரு டேக்கையும் பல டேக்குகள் வாங்கி நடித்த தினேஷ், குக்கூ பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கும் தனி பயிற்சியை தற்போது எடுத்து வருகிறாராம். |
|||||
by Swathi on 08 Oct 2014 0 Comments | |||||
Tags: Actor Dinesh Dinesh Cuckoo Movie Thirudan Police திருடன் போலீஸ் குக்கூ தினேஷ் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|