LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- Contribution- Medicine

பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.

பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
 
யாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் விருதுகளில் ஒன்றான OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார். இந்த விருது பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் கோப்பையை பிறப்பிடமாகக் கொண்ட மூத்ததம்பி குமாரசாவாமி, (இவர் என் மனைவி பூரணியின் சிறிய தந்தையார்) அச்சுவேலி வளலாயை பிறப்பிடமாக் கொண்ட சிவபாதமங்கை குமாரசாமி தம்பதியினரின் புதல்வரான பேராசிரியர் அரவிந்தன் குமாரசுவாமி (Professor Arri Coomarasamy MBChB, MD, FRCOG, FMedSci) பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் ( University of Birmingham) மருத்துவ மற்றும் பல் மருத்துவ அறிவியல் கல்லூரியிலும், மகளிர் மருத்துவ மற்றும் பரிசோதனை மருத்துவப் கல்லூரியிலும் மருத்துவப் பேராசிரியராகவும், பேர்மிங்காம் பெண்கள் மருத்துவமனை அறக்கட்டளையில் மகளிர் மருத்துவம், இனப்பெருக்க மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
 
(Arri Coomarasamy is a Professor of Gynaecology at the School of Clinical and Experimental Medicine, College of Medical and Dental Sciences, University of Birmingham, and a Consultant in Gynaecology, Reproductive Medicine and Surgery, Birmingham Women's Hospital Foundation Trust, Birmingham.)
இவருக்கு கிடைத்த இந்த உயர் விருது குறித்து birmingham women's and children's hospital (BWC) தனது உத்தியோகபூர்வ தளத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
 
”எங்கள் BWC குழும்தில் மிகவும் விரும்பப்படும் உறுப்பினரான பேராசிரியர் அரி. குமாரசாமி, பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதில் தனது ஆராய்ச்சியின் மூலம் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி, மாட்சிமை மிக்க மன்னரால் OBE விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம்.”
 
”நமது மகளிர் மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் குமாரசாமி, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான ரத்தப்போக்கு போன்றவற்றிற்கான ஆராட்சியாளராக களமிறங்கி தன் சேவையை தொடர்கிறார்.”
 
”எங்கள் அறக்கட்டளையின் மகப்பேறு மருத்துவ ஆலோசகரான, பேராசிரியர் குமாரசாமி பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பெண்ணோயியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியராகவும், ரொமியின் கருச்சிதைவு ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநராகவும், உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மகளிர் ஒத்துழைப்பு மையத்தின் இணை இயக்குநராகவும் உள்ளார்.
 
(Alongside his role as a Gynaecology Consultant at our Trust, Prof. Coomarasamy is also Professor of Gynaecology and Reproductive Medicine at the University of Birmingham, Director of the Tommy's National Centre for Miscarriage Research, Joint Director of the World Health Organisation Collaborating Centre for Global Women’s Health and founding trustee of Ammalife, a UK-registered charity with a global mission of reducing maternal deaths in low-income countries.)
 
மேலும் பிரித்தானியாவில் இவரால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாலைஃப் என்ற தொண்டு நிறுவனம், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் மகப்பேறு இறப்புகளைக் குறைக்கும் உலகளாவிய நோக்கத்துடன் தனது சேவையை தொடர்கிறது.
 
அத்துடன், பேராசிரியர் குமாரசாமி இளம் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுவதில் ஆர்வமாக உள்ளார், மேலும் அவரிடம் பயிற்சி பெற்ற பலர் சிறந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக உருவாகியுள்ளனர்.
 
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான விஷயங்களை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் என்பவற்றை கௌரவித்து ஜூன் 16 வெள்ளிக்கிழமை மூன்றாவது மன்னர் சார்லஸ் அவர்களின் பிறந்தநாள் மரியாதை அறிவிப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் குமாரசாமி, “கருச்சிதைவு மற்றும் பிரசவம் தொடர்பான இறப்புகளைச் கையாள்வதில் எங்கள் ஆராய்ச்சிக் பிரிவுகள் ஆற்றிவரும் சக்திவாய்ந்த பணிக்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.”
 
“ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், உலகில் எங்காவது ஒரு தாய் பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். எங்கள் ஆராய்ச்சியின் தாக்கம் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான வாழ்க்கையை உறு்திப்படுத்தவதாக அமையலாம். தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் கொண்டாடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி அவர்களுக்கு வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.. 
 
முகநூல் தகவல்:  https://www.facebook.com/nadarajah.kuruparan.33
 
 
by Swathi   on 19 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.