LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செய்திச் சுருக்கம் (ஜனவரி , 2020)

    • தேனி  மாவட்டத்தில் ராமசாமி நாயக்கன் பட்டி, உ.அம்மாபட்டி, மேல சிந்தலைசேரி என 15 கிராம ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிக்கக் கூடாது எனக் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
    • பஞ்சாயத்துத் தலைவிகளின்  பணிகளில் தலையிடும் கணவன்மார்கள்  கண்காணிப்பு. உள்ளாட்சித் தேர்தலில் தேர்வாகியுள்ள பல பெண் பிரதிநிதிகள் நிர்வகிக்கும் ஊராட்சிகளில் அவர்களின் கணவனின் தலையீடு இருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் ஐந்து விதமான நிலைக்குழுக்கள் அமைத்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றத் தலைவர்களுக்கு உத்தரவு.
    • நெல்லை புத்தகத்திருவிழா பிப்ரவரி 1 முதல் 10 வரை நடக்கவிருக்கிறது.
    • சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 13 லட்சம்  வாசகர்கள் வந்துள்ளதாகவும், 20 கோடி மதிப்பிலான புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வாணியம்பாடியில் நடந்த தமிழர் பண்பாட்டு விழாவில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று திருப்பத்தூர் ஆட்சியர் உறுதியளித்தார்.

 

  • தமிழ், சமஸ்கிருதத்தில் தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு.. தமிழில் நடத்தக் கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி.

 

  • விமானங்களில் தமிழில் அறிவிப்பு - மத்திய அரசு ஒப்புதல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் ! என்ற பாவேந்தரின் வரிகளுக்கு உணர்வூட்டியிருக்கிறோம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பித்தது. . 
  • தமிழர்களின் வீரவிளையாட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளைப் பிடித்து   முதலிடம் பெற்ற மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. 13 காளைகளைப் பிடித்த ராஜா இரண்டாம் இடத்தையும், 10 காளைகளைப் பிடித்த கார்த்திக் என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 
  • ரூ.600 கோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன். நிலவிற்கு மனிதரை அனுப்பும் ககன்யான் திட்ட ஆய்வுப்பணி தொடக்கம்
  • கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா வெற்றி பெற்றுள்ளார்.
  • முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்.
  • சு.வெங்கடேசனுக்குக் கனடாவின் இயல் விருது அறிவிப்பு
  • பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளைத் தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • தொடர்ந்து ஏழாவதாண்டாக லயோலா கல்லூரியின் மாற்று ஊடக மையம் வருடம்தோறும் நிகழ்த்தும் வீதி விருதுகள் திருவிழா ஜனவரி 11 & 12 நாட்களில் நடைபெற்றது
  • உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி அதிகத் தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலமும், இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இடம்பெற்றுள்ளன.
  • விவசாயிகளைக் கவுரவிக்கும் விதமாக எருதுகள் பூட்டி நிலத்தில் ஏர் உழுவது போன்ற வடிவில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை.
  • ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 
  • கோவையை அடுத்து தஞ்சை விமானப்படைத் தளம் மேம்படுத்தப்பட்டு தற்போது சுகோய் விமானங்கள் அங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.  
  • திடக்கழிவு மேலாண்மை விதிகளைக் கடுமையாக்க  வீடுகள் & வணிக நிறுவனங்களில் குப்பைகளைச் சேகரிக்கச் சென்னை மாநகராட்சிக் கட்டணம் அறிவிப்பு.
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரைத் தகுதிநீக்கம் செய்துள்ளது. ஏழு பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

 

by Swathi   on 08 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.