வாள்வீச்சில் தனிப்பெரும் சாதனை நிகழ்த்தியுள்ள தமிழக வீராங்கனை பவானி தேவி.
சீனாவின் வுக்ஸி நகரில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி.சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறிய பவானி உஸ்பெகிஸ்தானின் தயிபெகோவாவிடம் தோல்வியினை சந்தித்தார். இதனால் பவானி தேவி வெண்கலப் பதக்கம் பெற்றார். இப்பதக்கத்தினை பவானி தேவி பெறுவதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற தனிப்பெரும் சாதனையினை நிகழ்த்தியுள்ளார். பவானி தேவி அர்ஜுனா விருது பெற்ற வாள்வீச்சு வீராங்கனை. இவர் தமிழகத்தின் சென்னைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
|