LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தென்மாவட்டப் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு

தென்மாவட்டப் பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம் பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக் கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 30/12/2023 ஆம் தேதி திறந்து வைத்தார்.

 

கோயம்பேடு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எளிதாகப் பய ணத்தை மேற்கொள்ள வசதியாகக் கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.

 

 திமுக ஆட்சியில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்ததைத் தொடர்ந்து, அண்மையில் வெள்ளோட்டமும்

 விடப்பட்டது. இந்நிலையில் இப்பேருந்து முனையம் திறப்பு விழா 30/12/2023-ல் நடைபெற்றது.

 

இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பேருந்து முனையத்தைத் திறந்துவைத் தார். அதைத்தொடர்ந்து, பேருந்து நிலைய நுழைவாயிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

 

பின்னர், அரசு விரைவு போக்கு வரத்துக் கழக பேருந்துகள், அரசுப் போக்குவரத்துப் பேருந்துகள், மாநகரப் போக்குவரத்துப் பேருந்துகள் என முதற்கட்டமாக 10 பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

 

3,500 மாநகரப் பேருந்துகள்

 

மேலும் இப்பேருந்து முனையத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்கான அனுமதி ஆணையை மாற்றுத் திறனாளி பயனாளி ஒருவருக்கு வழங்கி, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் சிறப்பை விளக்கும் காணொலிக் காட்சியைப் பார்வையிட்டார். பேருந்து முனைய வசதிகள் இப்பேருந்து முனையம் 6 லட்சம் சதுரடி பரப்பளவில் 2 தரைகீழ் தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 தனியார் பேருந்து களை நிறுத்த முடியும். 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

 

ஓய்வறைகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பேருந்து நடைமேடைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ‘க்யூஆர்’ கோடு மூலம் சீட்டுகள் வழங்கும் வசதி, 2 அடித்தளங்களில் 324 கார்கள், 2,769 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஆகியவை உள்ளன. பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் உள்ளிட்டவை உள்ளன.

 

ரூ.140 கோடியில் ‘ஸ்கைவாக்’

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசும்போது, ‘‘கடந்த ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து முனையப் பணிகள் 30 சதவீதம் மட்டுமே முடிவடைந்தது. 70 சதவீதப் பணிகள் இந்த ஆட்சியில் முடிக்கப் பட்டன. சிறு மழைபெய்தாலே குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. அதற்காக ரூ.13 கோடியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டது. 8 கிமீ நீளத்துக்கு முழுமையான சாலை அமைக்கப்பட்டது. 6 ஏக்கரில் ரூ.11 கோடியில் அழகிய பூங்கா மற்றும் 16 ஏக்கரில் ரூ.13 கோடியில் காலநிலை பூங்கா ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் போது, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பயணிகள் பயணிப்பார்கள். ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.140 கோடியில் ஸ்கைவாக் பணி தொடங்க உள்ளது’’ என்றார். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து நிலையத்தில் மட்டும் நடைமேடைகளில் குறைவான இருக்கைகள் உள்ளன.

ஆனால் மாநகரப் பேருந்து இயக்கப்படும் பகுதிகளில் ஓர் இருக்கை வசதிகூட இல்லை. எனவே அந்தப் பகுதியில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முனையத்தில் இலவச தனியார் மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ். ஆர்.ராஜா, வரலட்சுமி, போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் சி.சமய மூர்த்தி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

by Kumar   on 31 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.